104 ரன்ஸ்.. ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால் 22 வயதில் மாஸ் சாதனை.. 12வது வருடமாக மும்பைக்கு நேர்ந்த சோகம்

Jaiswal 104
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 22ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் 38வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற மும்பை முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பைக்கு ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் ஓவரிலேயே ரோஹித் சர்மா 5 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

அடுத்த ஓவரிலேயே இஷான் கிசானை டக் அவுட்டாக்கிய சந்தீப் சர்மா அடுத்ததாக வந்த சூரியகுமார் யாதவை 10 ரன்களில் காலி செய்தார். அதனால் 20/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய மும்பைக்கு அடுத்து வந்த திலக் வர்மா நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினார். ஆனால் அவருடன் எதிர்புறம் விளையாடிய முகமது நபியை 23 ரன்களில் அவுட்டாக்கிய சஹால் ஐபிஎல் தொடரில் 200 விக்கெட்டுகளை எடுத்த முதல் வீரராக வரலாறு படைத்தார்.

- Advertisement -

ஃபார்முக்கு வந்த ஜெய்ஸ்வால்:
இருப்பினும் அடுத்ததாக வந்த நேஹல் வதேரா அதிரடியாக விளையாடி 5வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 3 பவுண்டரி 4 சிக்சருடன் 49 (24) ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஹர்திக் பாண்டியா 10 ரன்னில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய திலக் வர்மா அரை சதமடித்து 65 (45) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதியில் டிம் டேவிட் 3 (5) ரன்னில் அவுட்டாகி ஃபினிஷிங் செய்ய தவறினார்.

அதனால் 20 ஓவரில் மும்பை 179/9 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா 5, ட்ரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து 180 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ஜெய்ஸ்வால் – ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிரடியாக விளையாடி 74 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். அதற்கிடையே மழை குறுக்கிட்டாலும் தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 35 (25) ரன்களில் சாவ்லா சுழலில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

ஆனால் இந்த சீசனில் இதுவரை தடுமாறி வந்த ஜெய்ஸ்வால் இப்போட்டியில் முதல் முறையாக அட்டகாசமாக விளையாடி ஃபார்முக்கு திரும்பி அரை சதமடித்தார். அப்போது 50 ரன்களில் அவர் கொடுத்த கேட்ச்சை நேஹல் வதேரா கோட்டை விட்டார். அதை பயன்படுத்திய ஜெய்ஸ்வால் தொடர்ந்து மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கிய ஜெயஸ்வால் சதமடித்து 9 பவுண்டரி 7 சிக்ஸருடன் 104* (60) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார்.

இதையும் படிங்க: ஐ.பி.எல் வராலற்றில் முதல் பந்து வீச்சாளராக யுஸ்வேந்திர சாஹல் நிகழ்த்தியுள்ள மாபெரும் சாதனை – விவரம் இதோ

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 22 வயதிலேயே 2 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற தனித்துவமான சாதனையை படைத்த அவர் ஃபார்முக்கு திரும்பி மாஸ் காட்டியுள்ளார். அவருடன் கேப்டன் சஞ்சு சாம்சன் 38* (28) ரன்கள் எடுத்ததால் 18.4 ஓவரில் 183/1 ரன்கள் எடுத்த ராஜஸ்தான் 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. மறுபுறம் 2012க்குப்பின் தொடர்ந்து 12வது வருடமாக ஜெய்ப்பூரில் தோல்வியை சந்தித்த மும்பை இந்த சீசனில் 5வது தோல்வியை பதிவு செய்தது.

Advertisement