இரட்டை சதம் அப்றம்.. நாளைக்கு இந்திய அணிக்காக அதை செய்வேன்.. 179 ரன்கள் வெளுத்த ஜெய்ஸ்வால் பேட்டி

Yashasvi Jaiswal 3
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா விளையாடும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது. எனவே ஆரம்பத்திலேயே முன்னிலையில் இருக்கும் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாளில் 336/6 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியாவுக்கு ஜெயிஸ்வாலுடன் இணைந்து 40 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த சுப்மன் கில் 34 ரன்களில் அவுட்டான நிலையில் அதற்கடுத்ததாக வந்த ஸ்ரேயாஸ் ஐயரும் 27 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்தையே கொடுத்தார்.

- Advertisement -

2வது நாளிலும் அடி:
ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்த நிலையில் எதிர்ப்புறம் வந்த அறிமுக வீரர் ரஜத் படிடார் நிதானமாக விளையாடிய போதிலும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து வந்த அக்சர் பட்டேல் 27, கேஎஸ் பரத் 17 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

இருப்பினும் எதிர்பக்கம் தொடர்ந்து நங்கூரமாக நின்று இங்கிலாந்துக்கு சவாலாக மாறிய ஜெய்ஸ்வால் சதமடித்து முதல் நாள் முடிவில் 179* ரன்கள் குவித்துள்ளார். குறிப்பாக முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 80 ரன்களில் அவுட்டாகி செய்த தவறை இம்முறை செய்யாத அவர் மற்ற பேட்ஸ்மேன்கள் 35 ரன்கள் கூட தாண்டாத போது தனி ஒருவனாக 179* ரன்கள் அடித்துள்ளார். இதைத்தொடர்ந்து 5* ரன்களுடன் களத்தில் உள்ள அஸ்வினுடன் சேர்ந்து நாளைய போட்டியில் அவர் இரட்டை சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் 2வது நாள் ஆட்டத்தில் இரட்டை சதமடிப்பதை விட கடைசி விக்கெட் வரை நின்று இந்தியாவுக்காக முடிந்தளவுக்கு பெரிய ரன்கள் குவிக்க முயற்சிக்க உள்ளதாக ஜெய்ஸ்வால் கூறியுள்ளார். இது பற்றி முதல் நாள் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு. “நான் ஒவ்வொரு செஷனாக விளையாட விரும்பினேன். இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசிய போது நான் ஒவ்வொரு ஸ்பெல்லில் நன்றாக விளையாட முயற்சித்தேன். ஆரம்பத்தில் சுழல், பவுன்ஸ், வேகம் ஆகியவற்றிற்கு சாதகமாக பிட்ச் இருந்தது”

இதையும் படிங்க: 102 வருட கிரிக்கெட்டில் 2 ஆவது முறையாக நடைபெற்ற அரிதான நிகழ்வு – ஜோ ரூட் கையால் நடைபெற்ற அதிசயம்

“அதில் நான் சுமாரான பந்துகளை சமப்படுத்தி கடைசி வரை விளையாட முயற்சித்தேன். இதை இரட்டை சதமாக மாற்றி கடைசி வரை அணிக்காக விளையாட விரும்புகிறேன். குறிப்பாக தற்போதைய நிலைமையிலிருந்து நாளை இன்னும் இந்திய அணியை மீட்க விரும்புகிறேன். காலையில் கொஞ்சம் வித்தியாசமாக இருந்த பிட்ச் பின்னர் செட்டிலானது. இந்த இன்னிங்ஸை கடைசி வரை நின்று பெரியதாக மாற்ற முடியும் என்ற நம்பிக்கையை ராகுல் மற்றும் ரோகித் பாய் கொடுத்துள்ளனர்” என்று கூறினார்.

Advertisement