102 வருட கிரிக்கெட்டில் 2 ஆவது முறையாக நடைபெற்ற அரிதான நிகழ்வு – ஜோ ரூட் கையால் நடைபெற்ற அதிசயம்

Root
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்று பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கி நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் இந்திய அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதன்படி இன்றைய முதல் நாள் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணி மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி போட்டியின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களை குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார்.

- Advertisement -

அவரை தவிர்த்து சுப்மன் கில் 34 ரன்களையும், ரஜத் பட்டிதார் 32 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக 102 ஆண்டுகால டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவது முறையாக ஒரு அரிதான நிகழ்வு நடைபெற்றுள்ளது. அந்த வகையில் எப்பொழுதுமே இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் இரண்டு வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து போட்டியை துவங்கும்.

இவ்வேளையில் இன்றைய போட்டியில் அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் இரண்டாவது ஓவரை வீசி சாதனை நிகழ்த்தியுள்ளார். அதாவது எப்பொழுதுமே டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் இன்னிங்சின் போது இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் போட்டியை துவங்குவது வழக்கம்.

- Advertisement -

ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இரண்டாவது ஓவரை ஜாக் லீச்சை வைத்து வீச வைத்தது. அதனை தொடர்ந்து தற்போது ஜோ ரூட்டை வைத்து இரண்டாவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீச வைத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியான பாணியை கையாண்டு வரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் தற்போது இந்திய ஆடுகளங்களில் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக உதவி கிடைக்கும் என்பதை கருத்தில் கொண்டு ஜோ ரூட்டை வைத்து இரண்டாவது ஓவரை வீசி வியக்க வைத்துள்ளார்.

இதையும் படிங்க : 339 ரன்ஸ்.. ஒருபக்கம் இந்தியாவை சாய்க்க துடிக்கும் இங்கிலாந்துக்கு மறுபக்கம் சவலாக நிற்கும் ஜெய்ஸ்வால்

ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து அணி தற்போது இரண்டாவது போட்டியிலும் ஆதிக்கம் செலுத்தும் வகையில் பல்வேறு திட்டங்களை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement