339 ரன்ஸ்.. ஒருபக்கம் இந்தியாவை சாய்க்க துடிக்கும் இங்கிலாந்துக்கு மறுபக்கம் சவலாக நிற்கும் ஜெய்ஸ்வால்

Yashasvi Jaiswal 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் இந்தியாவை 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. எனவே அதற்கு பதிலடி கொடுத்து வெற்றி பாதைக்கு திரும்பும் முனைப்புடன் இப்போட்டியில் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு யசஸ்வி ஜெயிஸ்வாலுடன் சேர்ந்து 40 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோகித் சர்மா 14 ரன்களில் அவுட்டானார். அதைத் தொடர்ந்து வந்த சுப்மன் கில் 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை பெற்ற போது மீண்டும் 34 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

சவாலான ஜெய்ஸ்வால்:
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக பேட்டிங் செய்த ஜெய்ஸ்வால் அரை சதம் கடந்து அசத்தினார். அவருடன் அடுத்ததாக ஜோடி சேர்ந்து தம்முடைய பங்கிற்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்ரேயாஸ் ஐயரும் மூன்றாவது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் 27 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றத்துடன் சென்றார்.

ஆனால் எதிர்ப்புறம் தொடர்ந்து இங்கிலாந்துக்கு தொல்லை கொடுத்து சவாலாக மாறிய ஜெய்ஸ்வால் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சருடன் தன்னுடைய 2வது டெஸ்ட் சதத்தை அடித்தார். குறிப்பாக கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 80 ரன்களில் அவுட்டாகி செய்த தவறை இம்முறை செய்யாத அவர் சதத்தை விளாசி இந்தியாவை வலுப்படுத்தினார். அதே வேகத்தில் தொடர்ந்து விளையாடிய அவர் முதல் நாளிலேயே 150 ரன்கள் கடந்து இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவினார்.

- Advertisement -

இருப்பினும் அவருக்கு கை கொடுக்க வேண்டிய ரஜத் படிடார் 32, அக்சர் பட்டேல் 27 ரன்களிலும் கேஎஸ் 17 ரன்களிலும் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அப்போது நிறைவுக்கு வந்த முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் இந்தியா 336/6 ரன்கள் குவித்து இந்த போட்டியில் நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது. குறிப்பாக கேப்டன் ரோஹித், கில், ஸ்ரேயாஸ், அக்சர் என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒருபுறம் ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் எதிர்ப்புறம் கில்லியாக நிற்கும் ஜெய்ஸ்வால் 17 பவுண்டரி 5 சிக்சருடன் 179* (257) ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து இந்தியாவை வலுப்படுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: 232 ரன்ஸ்.. தொடர்ந்து 10 வெற்றிகள்.. புதிய கேப்டன் ஸ்மித் தலைமையிலும் வெ.இ அணியை பந்தாடிய ஆஸி

இதே வேகத்தில் அவர் இரண்டாவது நாளில் இரட்டை சதமடிக்க வேண்டும் என்பதை ரசிகர்களின் விருப்பமாகும். அவருக்கு உறுதுணையாக அஸ்வின் 5* ரன்களுடன் களத்தில் இருக்கிறார். மறுபுறம் சற்று தடுமாற்றமாகவே செயல்பட்ட இங்கிலாந்து சார்பில் சோயா பஷீர் மற்றும் ரீகன் அகமது ஆகிய இளம் வீரர்கள் தலா 2* விக்கெட்கள் எடுத்தனர்.

Advertisement