232 ரன்ஸ்.. தொடர்ந்து 10 வெற்றிகள்.. புதிய கேப்டன் ஸ்மித் தலைமையிலும் வெ.இ அணியை பந்தாடிய ஆஸி

AUS vs WI 1
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அங்கு முதலாவதாக நடந்த டெஸ்ட் தொடரை 1 – 1 (2) என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக 27 வருடங்கள் கழித்து ஆஸ்திரேலிய மண்ணில் வென்ற அந்த அணி 35 வருங்களுக்கு பின் புகழ்பெற்ற காபா கிரிக்கெட் மைதானத்தில் வென்று மாபெரும் சாதனை படைத்தது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்தது.

அதை தொடர்ந்து இந்த சுற்றுப்பயணத்தில் அடுத்ததாக ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகின்றன. அத்தொடரின் முதல் போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி புகழ்பெற்ற மெல்போர்ன் நகரில் துவங்கியது. இத்தொடரில் 2023 உலகக் கோப்பையை வென்ற பட் கமின்ஸ்க்கு பதிலாக புதிய கேப்டனாக செயல்படும் ஸ்டீவ் ஸ்மித் டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

- Advertisement -

10வது வெற்றி:
அதைத்தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அலிக் அதனேஷ் 5, ஜஸ்டின் க்ரீவ்ஸ் 1, கேப்டன் ஷாய் ஹோப் 12, காவேன் ஹோட்ஜ் 11 ரன்களில் ஆஸ்திரேலிய பவுலர்களின் தரமான பந்து வீச்சில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். அதனால் 59/4 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணியை கேசி கார்ட்டி மற்றும் ரோஸ்டன் சேஸ் ஆகியோர் ஜோடி சேர்ந்து மீட்டெடுக்க முயற்சித்தனர்.

அந்த வகையில் 5வது விக்கெட்டுக்கு 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு ஓரளவு காப்பாற்றிய இந்த ஜோடியில் ரோஸ்டன் அரை சதமடித்து 59 (67) ரன்களில் அவுட்டானார். அடுத்த சில ஓவர்களில் கேசி கார்ட்டியும் சதத்தை நழுவ விட்டு 88 (108) ரன்களில் ரன் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் பெரிய ரன்கள் எடுக்க தவறியதால் 48.4 ஓவரில் வெஸ்ட் இண்டீஸை 231 ரன்களுக்கு சுருட்டிய ஆஸ்திரேலிய சார்பில் அதிகபட்சமாக சேவியர் பார்லட் 4, சீன் அபௌட் 2, கேமரூன் கிரீன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

- Advertisement -

அதை தொடர்ந்து 232 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு டிராவிஸ் ஹெட் 4 ரன்களில் மேத்தியூ போர்ட்ஜ் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேமரூன் கிரீனுடன் சேர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மற்றொரு துவக்க வீரர் ஜோஸ் இங்கிலீஷ் அதிரடியாக 65 (43) ரன்கள் குவித்து மோட்டி சுழலில் சிக்கினார். அதை தொடர்ந்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் நங்கூரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதமடித்து 79* (79) ரன்களும் கேமரூன் கிரீன் 77* ரன்களும் எடுத்தனர்.

இதையும் படிங்க: இப்படியே போனா உங்கள தூக்கிட்டு அவரை சேத்துடுவாங்க.. இந்திய வீரரை ஓப்பனாக எச்சரித்த ரவி சாஸ்திரி

அதனால் 38.3 ஓவரிலேயே 232/2 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியா 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதான வெற்றி பெற்றது. அந்த வகையில் புதிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலும் ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றிப் பாதையில் நடக்கிறது. மேலும் இதையும் சேர்த்து ஒருநாள் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் 10 தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றுள்ள ஆஸ்திரேலியா தங்களை உலக சாம்பியன் என்பதை நிரூபித்துள்ளது.

Advertisement