இப்படியே போனா உங்கள தூக்கிட்டு அவரை சேத்துடுவாங்க.. இந்திய வீரரை ஓப்பனாக எச்சரித்த ரவி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பிப்ரவரி இரண்டாம் தேதி துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த பெரிய தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்த இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அதனால் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் இப்போட்டியில் களமிறங்கிய இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களில் அவுட்டாக அடுத்ததாக வந்த சுப்மன் கில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் 34 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். சச்சின், விராட் கோலி வரிசையில் இந்திய பேட்டிங் துறையின் அடுத்த சூப்பர்ஸ்டார் என்று பாராட்டும் அளவுக்கு சமீப காலங்களில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் கடந்த வருடம் உலகிலேயே அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்தார்.

- Advertisement -

எச்சரித்த சாஸ்திரி:
இருப்பினும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறி வரும் அவர் இதுவரை 40 இன்னிங்ஸில் 1097 ரன்களை 29.65 என்ற சுமாரான சராசரியில் எடுத்து தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். எனவே வாய்ப்பின் அருமையை உணரும் வரை அவரை நீக்கிவிட்டு மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

அந்த சூழ்நிலையில் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டிய அவர் இப்போட்டியிலும் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளார். இந்நிலையில் அனுபவ வீரர் புஜாரா விளையாடிய 3வது இடத்தில் நீங்கள் தொடர்ந்து இப்படி விளையாடினால் விரைவில் நீக்கப்படுவீர்கள் என்று கில்லுக்கு முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி எச்சரிக்கை கொடுத்துள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இது புத்துணர்ச்சியான இளம் அணி. இந்த இளம் வீரர்கள் தங்களுடைய தரத்தை தங்களுக்குத் தாங்களே நிரூபிக்க வேண்டும். ஏனெனில் புஜாரா காத்திருக்கிறார் என்பதை மறந்து விடாதீர்கள். ரஞ்சி கோப்பையில் நன்றாக விளையாடி வரும் அவர் இப்போதும் இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பைக் கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீங்கள் வெளியே நின்று விளையாட வேண்டும்”

இதையும் படிங்க: சூரியகுமார் யாதாவிற்கு பிறகு ரஜத் பாட்டிதார் நிகழ்த்தியுள்ள அரிதான சாதனை – விவரம் இதோ

“இல்லையென்றால் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். ஆனால் ஆண்டர்சன் போன்ற கிளாஸ் நிறைந்தவருக்கு எதிராக நீங்கள் மீண்டும் கடினமான கைகளுடன் விளையாடுகிறீர்கள்” என்று கூறினார். அவர் கூறுவது போல கடைசியாக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடிய புஜாரா 2024 ரஞ்சிக்கோப்பையில் 243*, 49, 43, 43, 66, 91 என நல்ல ரன்களை எடுத்து வருகிறார். எனவே விரைவில் சுப்மன் கில் ரன்கள் அடிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Advertisement