சூரியகுமார் யாதாவிற்கு பிறகு ரஜத் பாட்டிதார் நிகழ்த்தியுள்ள அரிதான சாதனை – விவரம் இதோ

Rajat-Patidar
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது தற்போது பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

அதன்படி தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் தேநீர் இடைவேளை வரை மூன்று விக்கெட்டுகளை இழந்து 225 ரன்கள் குவித்துள்ளது. துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 125 ரன்களுடனும், ரஜத் பட்டிதார் 25 ரன்களுடன் தொடர்ந்து விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் கே.எல் ராகுல் காயம் காரணமாக விலகியதால் அவருக்கு பதிலாக ரஜத் பட்டிதார் அறிமுகவீரராக இந்திய அணிக்காக களமிருக்கிறார். அப்படி இவர் அறிமுகமானதின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சூர்யகுமார் யாதவுக்கு அடுத்து ஒரு அரிதான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதாவது இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் அதிக வயதில் களமிறங்கிய வீரராக சூரியகுமார் யாதவ் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானபோது அவருக்கு 32 வயது 148 நாட்கள் ஆகி இருந்தது.

- Advertisement -

அதனை தொடர்ந்து தற்போது ரஜத் பட்டிதார் தனது 30 வயது 246 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமாகி இந்திய அணிக்காக அதிக வயதில் டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல் போட்டியில் தவறியதை சதத்தை விளாசிய ஜெய்ஸ்வால்.. சச்சின், சாஸ்திரிக்கு பின் தனித்துவமான சாதனை

உள்ளூர் கிரிக்கெட்டில் மத்தியப்பிரதேச அணிக்காக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஜத் பட்டிதார் அண்மையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராகவும் 2 சதங்கள் அடிக்கவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement