முதல் போட்டியில் தவறியதை சதத்தை விளாசிய ஜெய்ஸ்வால்.. சச்சின், சாஸ்திரிக்கு பின் தனித்துவமான சாதனை

Yashasvi Jaiswal
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் கையில் வைத்திருந்த வெற்றியை கடைசியில் சொதப்பி கோட்டை விட்ட இந்தியா இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

இந்திய அணியில் ரஜத் படிடார் அறிமுகமாக களமிறங்கினார். மேலும் காயத்தை சந்தித்த ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பதிலாக முகமது சிராஜ் நீக்கப்பட்டு குல்தீப் யாதவ், முகேஷ் குமார் அணியில் சேர்க்கப்பட்டார்கள். அதை தொடர்ந்து பேட்டிங் செய்த இந்தியாவுக்கு 40 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த கேப்டன் ரோஹித் சர்மா 14 ரன்களில் சோயப் பசீர் சுழலில் சிக்கினார்.

- Advertisement -

அசத்தல் சதம்:
அதை தொடர்ந்து வந்த சுப்மன் கில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் 34 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் நங்கூரமாக நின்ற மற்றொரு துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த போட்டியை போலவே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்தார்.

குறிப்பாக கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 80 (76) ரன்கள் விளாசிய அவர் சதத்தை தவற விட்டது இந்திய அணிக்கு பின்னாடைவாக அமைந்தது. ஆனால் இந்த போட்டியில் அதற்கு நேர்மாறாக நிதானமாக விளையாடிய அவர் அவசரமில்லாமல் பொறுமையுடன் கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி சிக்சருடன் அபாரமான சதமடித்தார்.

- Advertisement -

மேலும் கடந்த 2023ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் அறிமுகமாகி முதல் போட்டியிலேயே சதமடித்த அவர் தற்போது இந்திய மண்ணிலும் சதமடித்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 22 வயதிலேயே வெளிநாட்டு மண்ணிலும் சொந்த மண்ணிலும் சதமடித்த 3வது இந்திய வீரர் என்ற தனித்துவமான சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: முதல் போட்டியில் தவறியதை சதத்தை விளாசிய ஜெய்ஸ்வால்.. சச்சின், சாஸ்திரிக்கு பின் தனித்துவமான சாதனை

இதற்கு முன்பாக ரவி சாஸ்திரி மற்றும் சச்சின் டெண்டுல்கர் ஆகிய ஜாம்பவான்களும் தங்களுடைய 22 வயதுக்குள் வெளிநாடு மற்றும் இந்திய மண்ணில் சதமடித்துள்ளனர். இருப்பினும் அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அனைத்து நல்ல துவக்கத்தை பெற்ற போதிலும் 27 ரன்களில் டாம் ஹார்ட்லி சுழலில் சிக்கினார். அதனால் சற்று முன் வரை இந்தியா 194/3 ரன்கள் எடுத்துள்ள நிலையில் களத்தில் ஜெய்ஸ்வால் 117*, படிடார் 2* ரன்களுடன் விளையாடி வருகிறார்கள்.

Advertisement