ரூமுக்குள் அழுதேன்.. தோனியை வெச்சு அவங்க என்னை அப்படி செஞ்சது கஷ்டமாகிடுச்சு.. பண்ட் உருக்கம்

Rishabh Pant 2
- Advertisement -

டெல்லியை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் உள்ளூர் கிரிக்கெட்டில் நன்றாக விளையாடியதால் கடந்த 2017ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இந்தியாவுக்காக அறிமுகமானார். அதிரடியாக விளையாடக்கூடிய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக தன்னை ஐபிஎல் மற்றும் உள்ளூர் தொடர்களில் அடையாளப்படுத்திய அவர் அந்த சமயத்தில் ஓய்வு பெறவிருந்த ஜாம்பவான் எம்எஸ் தோனியின் இடத்தை நிரப்புவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

அந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் டெஸ்ட் கிரிக்கெட்டில் தோனியை மிஞ்சும் அளவுக்கு அசத்திய ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா போன்ற வெளிநாடுகளில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பராக சாதனை படைத்தார். அதே போல 2021 காபா போன்ற சில மறக்க முடியாத வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்த அவர் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் அடங்கிய வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் ஆரம்பம் முதல் இப்போது வரை தடுமாறி வருகிறார்.

- Advertisement -

ரூமுக்குள் அழுதேன்:
அதன் உச்சமாக 2019ஆம் ஆண்டு மொகாலியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் ஓய்வெடுத்த தோனிக்கு பதிலாக விக்கெட் கீப்பராக விளையாடிய அவர் முக்கிய நேரத்தில் ஆஸ்திரேலிய வீரர் அஸ்டன் டர்னரை ஸ்டம்பிங் செய்யும் வாய்ப்பை கோட்டை விட்டார். அதனால் கோபமடைந்த மொகாலி ரசிகர்கள் தோனி தோனி என்று கூச்சலிட்டு எதிர்ப்பை தெரிவித்த நிலையில் அவர் செய்த தவறால் இந்தியாவும் கடைசியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

இந்நிலையில் ஆரம்ப காலங்களில் தோனியுடன் தம்மை ஒப்பிட்டு ரசிகர்கள் விமர்சித்ததால் பலமுறை அறைக்குள் சென்று அழுததாக ரிசப் பண்ட் உருக்கத்துடன் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “முதலில் ஏன் கேள்விகள் எழுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் அணிக்குள் நுழைந்ததும் என்னை தோனியின் மாற்றாக இருப்பார் என்று அனைவரும் பேசினார்கள்”

- Advertisement -

“ஆனால் இளம் வீரர் மீது ஏன் ரசிகர்கள் கேள்வி எழுப்ப வேண்டும்? ஒப்பிட வேண்டும்? 500 போட்டிகளில் விளையாடிய ஒருவருடன் 5 போட்டியில் விளையாடிய ஒருவரை ஒப்பிடக்கூடாது. அந்த வகையில் என்னுடைய பெரிய பயணத்தில் நிறைய மேடு பள்ளங்கள் இருந்தது. அதில் மற்றவர்களுடன் என்னை ஒப்பிட்டது மோசமான உணர்வை கொடுத்தது”

இதையும் படிங்க: கோலி மாதிரி ரசிகர்களை வெச்சு அதை செய்ய தெரியல.. ரோஹித் மீது மைக்கேல் ஆத்தர்டன் அதிருப்தி

“அதனால் 20 – 21 வயதிலேயே மனதளவில் மூச்சு விட முடியாத அளவுக்கு அழுத்தத்தை சந்தித்தன நான் அறைக்குள் சென்று அழுவேன். மொஹாலியில் ஸ்டம்ப்பிங்கை நான் தவற விட்ட போது ரசிகர்கள் தோனி தோனி என்று முழங்கினர். இருப்பினும் தோனியுடனான என்னுடைய உறவை விவரிப்பது கடினமாகும். அவருடன் நான் எப்போதும் சுதந்திரமாக பேசி மற்றவர்களுடன் விவாதிக்காததை கூட விவாதிப்பேன்” என்று கூறினார்.

Advertisement