கோலி மாதிரி ரசிகர்களை வெச்சு அதை செய்ய தெரியல.. ரோஹித் மீது மைக்கேல் ஆத்தர்டன் அதிருப்தி

Micheal Atherton
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியா 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்து நிர்ணயித்த 231 ரன்கள் சேசிங் செய்ய முடியாமல் 28 ரன்கள் வித்தியாசத்தில் பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.

அதன் வாயிலாக 92 வருடங்களில் தங்களுடைய சொந்த மண்ணில் 100க்கும் மேற்பட்ட ரன்களை முன்னிலையாகப் பெற்றும் முதல் முறையாக ஒரு அவமான தோல்வியை இந்தியா பதிவு செய்தது. அந்த போட்டியில் சுமாரான பேட்டிங், பவுலிங் என்பதை தாண்டி ரோகித் சர்மாவின் கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது தோல்விக்கு காரணமாக அமைந்ததாக நிறைய முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர்.

- Advertisement -

ரசிகர்களை வெச்சு:
குறிப்பாக ஃபீல்டர்களை சரியாக நிறுத்தி பவுலர்களை மாற்றி மாற்றி பயன்படுத்த தவறிய அவர் 164/5 என சரிந்த இங்கிலாந்து கடைசியில் 420 ரன்கள் அடிக்க விடும் அளவுக்கு சுமாராக கேப்டன்ஷிப் செய்தார். இந்நிலையில் முதல் போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஹைதராபாத் ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தி தங்களுக்கு உத்வேகத்தை கொடுக்குமாறு ரோஹித் சர்மா கேட்கத் கூறியதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் ஆத்தர்டன் கூறியுள்ளார்.

குறிப்பாக விராட் கோலி போல அணி தடுமாறும் போது கைதட்டி உத்வேகத்தை கொடுக்குமாறு ரசிகர்களிடம் ரோகித் சர்மா கேட்கவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி டைம்ஸ் பத்திரிகையில் கூறியது பின்வருமாறு. “முதல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி இல்லாதது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். பெரிய ரன்கள் அடிப்பது, ஸ்லிப் பகுதியில் பாதுகாப்பாக கேட்ச்கள் பிடிப்பது, அழுத்தத்தை தாங்கும் திறன் மற்றும் களத்தில் உணர்ச்சிமிக்க அணுகுமுறையை வெளிப்படுத்துதல் போன்ற அவருடைய செயல்பாடுகளை இந்தியா முதல் போட்டியில் தவற விட்டது”

- Advertisement -

“ரோகித் சர்மா தமக்கு முந்தைய கேப்டனான விராட் கோலியிடமிருந்து மிகவும் வித்தியாச கேப்டனாக இருக்கிறார். எம்எஸ் தோனியை போல அவ்வளவு செயலற்றவராக இல்லாவிட்டாலும் ஒரே நேரத்தில் அவர் அதிக நிதானமாக இருக்கிறார். ஹைதராபாத்தில் இங்கிலாந்து முன்னேற தொடங்கியதும் களத்தில் விராட் கோலி மின்சாரத்தை போல் செயல்படக்கூடிய அணுகுமுறை இந்தியாவுக்கு கிடைக்காமல் தவறி போனது”

இதையும் படிங்க: செக்யூரிட்டி வேலை செய்த சமர் ஜோசப்.. உழைப்புக்கு கிடைத்த ஜேக்பாட்.. வெ.இ வாரியம் அறிவிப்பு

“அவர் ரசிகர்களை எப்ப முயற்சித்திருப்பார். அந்த ஆற்றல் மற்ற வீரர்களிடமும் பரிமாறப்பட்டிருக்கும்” என்று கூறினார். அவர் கூறுவது போல அணி தடுமாறும் போதெல்லாம் கேப்டனாக விராட் கோலி கைதட்டி உற்சாகத்தையும் உத்வேகத்தையும் கொடுங்கள் என்று ரசிகர்களிடம் கேட்டு வாங்குவதை பலமுறை பார்த்துள்ளோம். அப்படி ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உத்வேகத்தை கொடுப்பது எதிரணி மீது அழுத்தத்தை உண்டாக்கி இந்தியாவுக்கு வெற்றியை கொடுக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement