செக்யூரிட்டி வேலை செய்த சமர் ஜோசப்.. உழைப்புக்கு கிடைத்த ஜேக்பாட்.. வெ.இ வாரியம் அறிவிப்பு

Shamar Joseph 2
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் பெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 1 – 1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் சமன் செய்தது. குறிப்பாக முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த வெஸ்ட் இண்டீஸ் புகழ்பெற்ற காபா மைதானத்தில் நடந்த 2வது போட்டியின் 8 ரன்கள் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றி பெற்றது. குறிப்பாக 2வது இன்னிங்ஸில் அபாரமாக பந்து வீசிய சமர் ஜோசப் 7 விக்கெட்டுகள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ்க்கு மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

அதன் வாயிலாக 1997க்குப்பின் 27 வருடங்கள் கழித்து முதல் முறையாக ஆத்திரலிய மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியை வென்ற வெஸ்ட் இண்டீஸ் காபா மைதானத்தில் 35 வருடங்கள் கழித்து மாபெரும் வெற்றி பெற்றது. அதை விட அந்தப் போட்டியின் 2வது இன்னிங்ஸில் மிட்சேல் ஸ்டார்க் வீசிய துல்லியமான யார்க்கர் பந்தால் பாதம் உடைந்த சமர் ஜோசப் கண்ணீருடன் வெளியேறியதால் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

உழைப்புக்கு ஜேக்பாட்:
ஆனால் முதலுதவிகளை மட்டும் எடுத்துக்கொண்டு கில்லியாக பந்து வீசிய அவர் 7 விக்கெட்டுகள் சாய்த்து உலகின் டெஸ்ட் சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி மாஸ் வெற்றியை பெற்றுக் கொடுத்தார். சொல்லப்போனால் வெறும் 24 வயதாகும் அவர் அந்த தொடரில் அறிமுகமாகி மொத்தம் 13 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதன் காரணமாக தொடர் நாயகன் விருதையும் வென்ற அவர் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றார்.

முன்னதாக வெஸ்ட் இண்டீஸில் வறுமை காரணமாக மிகவும் குறைந்த சம்பளத்திற்கு பாதுகாவலராக வேலை செய்து வந்த சமர் ஜோசப் வீணான பாட்டில்கள் மற்றும் பழங்களை பந்தாக பயன்படுத்தி கிரிக்கெட்டை விளையாட்டு துவங்கினார். அப்படியே படிப்படியாக டுக்பர் பார்க் கிளப் அணிக்காக 2வது டிவிஷன் போட்டிகளில் விளையாடிய அவர் வெஸ்ட் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோமரியா செபார்ட் உதவியுடன் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார். அதில் அசத்தியதால் தற்போது சர்வதேச அரங்கிலும் அறிமுகமாகியுள்ள அவர் முதல் தொடரிலேயே அபாரமாக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் மகத்தான வெற்றியை பெற்றுக் கொடுத்த சமர் ஜோசப்பின் உரிமை ஒப்பந்தத்தை தற்போது வெஸ்ட் இண்டீஸ் வாரியம் சர்வதேச ரிட்டைனர் ஒப்பந்தமாக மேம்படுத்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் காரணமாக சர்வதேச அளவில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடும் வீரர்களுக்கு கிடைக்கும் அதிகபட்ச சம்பளம் சமர் ஜோசப்புக்கும் கிடைக்கும்.

இதையும் படிங்க: 22வது வருடமாக ஆண்டர்சன் சாதனை.. மீண்டும் ஏமாற்றிய கேப்டன் ரோஹித்.. தடுமாறும் இந்திய அணி?

அத்துடன் இந்த ஒப்பந்தத்தால் வரும் காலங்களில் வெஸ்ட் இண்டீஸ்க்காக நிறைய போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பும் அவருக்கு கிடைக்கும். அதே போல 2024 டி20 உலகக் கோப்பையில் அவருடன் சேர்ந்து வேலை செய்ய உள்ளதாக பயிற்சியாளர் டேரன் சமி அறிவித்துள்ளார். அந்த வகையில் திறமை மற்றும் உழைப்பால் சமர் ஜோசப்புக்கு ஜேக்பாட் பரிசு கிடைத்துள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement