IND vs WI : ரோஹித் – ராகுலை முந்தி புதிய வரலாற்று சாதனை படைத்த கில் – ஜெய்ஸ்வால் ஜோடி, ரோஹித் – தவான் ஆல் டைம் சாதனையும் சமன்

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் 2016க்குப்பின் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்த இந்தியா ஆரம்பத்திலேயே பின்தங்கியது. இருப்பினும் முக்கியமான 3வது போட்டியில் வென்று தொடரை சமன் செய்யும் வாய்ப்பை தக்க வைத்த இந்தியா ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற்ற 4வது போட்டியிலும் 9 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் நடைபெற்ற அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவர்களில் 178/8 ரன்கள் சேர்த்தது.

அதிகபட்சமாக சிம்ரோன் ஹெட்மயர் 61 (39) ரன்களும் ஷாய் ஹோப் 45 (29) ரன்களும் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3 விக்கெட்களும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்களும் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 179 என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியாவுக்கு தொடக்க வீரர்கள் யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் ஆகிய இருவருமே ஆரம்பத்திலிருந்தே சுமாராக பந்து வீசிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு 15.3 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 165 ரன்கள் மெகா ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

- Advertisement -

சாதனை இளம் ஜோடி:
அதில் இந்த சுற்றுப்பயணம் முழுவதுமே தடுமாற்றமாக செயல்பட்டு விமர்சனத்திற்குள்ளான கில் 3 பவுண்டரி 5 சிக்சருடன் 77 (47) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுபுறம் கடந்த போட்டியில் அறிமுகமாகி 1 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்த ஜெயிஸ்வால் அதற்கும் சேர்த்து இப்போட்டியில் கடைசி வரை அவுட்டாகாமல் 11 பவுண்டரி 3 சிக்சருடன் 84* (51) ரன்கள் விளாசி ஃபினிஷிங் கொடுத்தார். அவர்களின் அதிரடியான ஆட்டத்தால் 17 ஓவரிலேயே 179/1 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்ற இந்தியா தொடரை சமன் செய்து வெஸ்ட் இண்டீஸ்க்கு தக்க பதிலடி கொடுத்து தங்களை நம்பர் ஒன் அணி என்பதை நிரூபித்து வருகிறது.

அந்த வகையில் 165 ரன்கள் ஜோடியாக குவித்து இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஜெய்ஸ்வால் – கில் ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற ரோகித் சர்மா – ஷிகர் தவான் ஆகியோரது ஆல் டைம் சாதனையை சமன் செய்தனர். அந்த பட்டியல்:
1. ரோஹித் சர்மா – ஷிகர் தவான் : 165, இலங்கைக்கு எதிராக, 2017
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் – சுப்மன் கில் : 165, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக, 2023*
2. ரோகித் சர்மா – ஷிகர் தவான் : 160, அயர்லாந்துக்கு எதிராக, 2018
3. ரோஹித் சர்மா – ஷிகர் தவான் : 158, நியூசிலாந்துக்கு எதிராக, 2017
4. ரோஹித் சர்மா – கேஎல் ராகுல் : 140, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக, 2021

- Advertisement -

அதை விட சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு போட்டியில் 150க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த முதல் இந்திய ஓப்பனிங் ஜோடி மற்றும் அதிக பார்ட்னர்ஷிப் ரன்கள் (165) அமைத்த இந்திய ஓப்பனிங் ஜோடி என்ற இரட்டை சாதனைகளையும் அவர்கள் படைத்துள்ளனர். இதற்கு முன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக கடந்த 2019ஆம் ஆண்டு ரோஹித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் 135 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனையாகும்.

அப்படி இந்தியாவுக்கு எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த இந்த ஜோடியில் கில் ஏற்கனவே 3 வகையான கிரிக்கெட்டிலும் சதங்கள் அடித்து கடந்த சில வருடங்களாகவே சிறப்பாக செயல்பட்டு வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.

இதையும் படிங்க:IND vs WI : டி20யிலும் கால் பதித்த ஜெய்ஸ்வால் – ரோஹித் சர்மாவின் 14 வருட ஆல் டைம் சாதனையை உடைத்து இளம் புயலாக சரித்திர சாதனை

மறுபுறம் கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் போன்ற உள்ளூர் தொடரில் தொடர்ந்து அசத்தி வரும் ஜெய்ஸ்வால் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி சதமடித்து சாதனைகள் படைத்த நிலையில் தற்போது டி20 கிரிக்கெட்டிலும் சாதனைகளுடன் கால் தடம் பதித்துள்ளார். அந்த வகையில் இந்தியாவுக்கு வருங்காலத்தில் சிறப்பாக செயல்படப் போகும் ஓப்பனிங் ஜோடி கிடைத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement