IPL 2023 : அவசரப்பட்டு ஜெய்ஸ்வாலுக்கு இந்திய ஒருநாள் அணியில் சான்ஸ் கொடுக்காதீங்க – டிகே சொல்லும் காரணம் என்ன

- Advertisement -

கோடைகாலத்தில் கடந்த 2 மாதங்களாக இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து உச்ச கட்டத்தை எட்டியுள்ள ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நிறைய இளம் வீரர்கள் அசத்தலாக செயல்பட்டு வருங்காலத்தில் இந்தியாவுக்காக விளையாடும் அளவுக்கு திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகளை அள்ளினர். அதில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இளம் தொடக்க வீரர் யசஎஸ்வி ஜெய்ஸ்வால் 625 ரன்கள் குவித்து ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட சீசனில் அதிக ரன்கள் அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார். குறிப்பாக வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் மும்பைக்கு எதிராக சதமடித்து 124 (62) ரன்கள் விளாசிய அவர் தனது பெயரை பொன்னெழுத்துக்களால் பொறித்தார்.

Yashasvi Jaiswal 2

- Advertisement -

அதை விட கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் முதல் ஓவரில் வரலாற்றில் உச்சகட்டமாக 26 ரன்கள் தெறிக்க விட்ட அவர் 13 பந்துகளில் 50 ரன்கள் கடந்து அதிவேக ஐபிஎல் அரை சதமடித்த வீரராகவும் ஆல் டைம் சாதனை படைத்தார். பானி பூரி விற்பவரின் மகனாக ஏழை குடும்பத்தில் பிறந்து கிரிக்கெட்டின் மீதான காதலால் உள்ளூர் அளவில் மும்பைக்காக விளையாடி அசத்திய அவர் ஏற்கனவே தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற 2020 ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பையில் அதிக ரன்கள் அடித்த வீரராக சாதனை படைத்து இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.

டிகே கோரிக்கை:
மேலும் சயீத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே, ரஞ்சி என 3 விதமான உள்ளூர் தொடர்களிலும் சதங்களை அடித்த அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான ஐபிஎல் தொடரிலும் அசத்தியதுள்ளதால் இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்று ரவி சாஸ்திரி பாராட்டினார். அதில் ஒரு படி மேலே சென்ற சுரேஷ் ரெய்னா தாமாக இருந்தால் நேரடியாக 2023 உலகக் கோப்பையில் அவரை தேர்வு செய்வேன் என பாராட்டினார்.

Jaiswal and Rohit

இந்நிலையில் சுப்மன் கில், இஷான் கிசான் போன்ற வீரர்கள் இருப்பதால் அவசரப்பட்டு ஒருநாள் அணியில் ஜெய்ஸ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கக் கூடாது என்று தெரிவிக்கும் தினேஷ் கார்த்திக் வேண்டுமானால் 2024 டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு டி20 அணியில் வாய்ப்பு கொடுக்கலாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“இந்திய ஒருநாள் அணியில் அவசரப்பட்டு வேகமாக ஜெய்ஸ்வாலை உள்ளே கொண்டு வர வேண்டிய அவசியமில்லை என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் மிகவும் சிறிய பையன். வேண்டுமானால் அவரை டி20 அணியில் வேகமாக சேர்க்கலாம். குறிப்பாக அடுத்து நடைபெறும் 50 ஓவர் உலக கோப்பைக்கு முன்பாக இந்தியா குறைவான ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கிறது. எனவே அடுத்த வருடம் நடைபெறும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு அவரை முதன்மை வீரராக டி20 அணியில் கொண்டு வரலாம்”

Dinesh-Karthik-1

“ஏனெனில் ஏற்கனவே ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் இருப்பதால் இந்திய ஒருநாள் அணியில் தொடக்க வீரருக்கு எந்த விதமான பஞ்சமும் இல்லை. எனவே உலகக்கோப்பைக்குப் பின் ஒருநாள் மற்றும் டி20 அணியில் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக விளையாடும் வீரராக இருப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இந்த உலகக் கோப்பைக்கு அவர் அவசரமாக விளையாட வேண்டும் என்ற அவசியமில்லை. குறிப்பாக இஷான் கிசான் அந்த இடத்திற்கு சிறப்பாக செயல்பட்டு வாய்ப்புக்காக காத்திருக்கிறார்”

இதையும் படிங்க:MI vs GT : மழையால் குவாலிபயர் 2 போட்டி ரத்தானால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் – ரூல்ஸ் சொல்வது என்ன?

“அதற்காக உலகக்கோப்பையில் இளம் வீரர்கள் விளையாடக்கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பையில் ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, ஜெய்ஸ்வால், திலக் வர்மா ஆகிய 4 வீரர்கள் விளையாடுவதற்காக தேர்வுக்குழு கதவை தட்டி வருகிறார்கள். இப்போதைக்கு இந்த வீரர்களை டி20 அணியில் மட்டும் வாய்ப்பளித்தால் போதுமானது” என்று கூறினார். அதாவது ஏற்கனவே தேவையான வீரர்கள் இருப்பதால் மிகவும் இளமையான ஜெய்ஸ்வால், ரிங்கு சிங் போன்ற வீரர்களை டி20 அணியில் மட்டும் பயன்படுத்தலாம் என தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.

Advertisement