MI vs GT : மழையால் குவாலிபயர் 2 போட்டி ரத்தானால் எந்த அணி இறுதிப்போட்டிக்கு செல்லும் – ரூல்ஸ் சொல்வது என்ன?

MI-vs-GT
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் ஏற்கனவே சி.எஸ்.கே அணியானது இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற வேளையில் இரண்டாவதாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறப்போகும் அணி எது என்பது இன்று தெரிந்துவிடும். இந்த முக்கியமான 2 ஆவது குவாலிபயர் போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் மோதுகின்றன.

MI vs GT

- Advertisement -

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதனால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இன்று அகமதாபாத் மைதானத்தில் 7.30-க்கு துவங்க இருந்த இந்த 2ஆவது குவாலிபயர் போட்டி தற்போது மழை காரணமாக துவங்குவதால் தாமதமாகியுள்ளது.

தற்போது மழை நின்று போட்டி தாமதமாக துவங்கும் என்று உறுதி செய்யப்பட்டாலும் ஒருவேளை மழை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்? எந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறித்த சந்தகம் பலருக்கும் எழுந்துள்ளது.

Motera

இந்நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக நாங்கள் இந்த போட்டி மழையால் ரத்தானால் ரூல்ஸ் படி என்ன நடக்கும் என்பதை இங்கே உங்களுக்காக எளிமையாகவும் தெளிவாகவும் தொகுத்து வழங்கவுள்ளோம்.

- Advertisement -

அதன்படி இன்றைய போட்டி முழுமையாக நடைபெற்றாலோ, அல்லது ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடைபெற்றாலோ போட்டிகளின் முடிவின் படியே வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும். ஒருவேளை மழை மீண்டும் பெய்து போட்டி முழுமையாக ரத்தானால் லீக் போட்டிகளின் முடிவின் படி அதிக வெற்றிகளை பெற்றுள்ள அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும்.

இதையும் படிங்க : Qulaifier 2 : இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

தற்போதைய நிலவரப்படி லீக் சுற்றுகள் அடிப்படையில் மும்பை அணியை காட்டிலும் குஜராத் அணி அதிக வெற்றிகளை பெற்றுள்ளதால் ஒருவேளை மழையால் போட்டி ரத்தாகும் பட்சத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியே நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும் எனபது குறிப்பிடத்தக்கது.

Advertisement