Qulaifier 2 : இரண்டாவது குவாலிபயர் போட்டியில் ஜெயிக்கப்போவது இந்த டீம் தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Akash-Chopra
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 16-ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதலாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்திய சி.எஸ்.கே அணியானது நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணியானது இன்று நடைபெறும் இரண்டாவது குவாலிபயர் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக விளையாடுகிறது.

MI vs GT

- Advertisement -

இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி நாளை மறுதினம் நடைபெறவுள்ள மாபெரும் இறுதிப்போட்டியில் சி.எஸ்.கே அணிக்கெதிராக பங்கேற்கும். இதன்காரணமாக இன்றைய இரண்டாவது குவாலிபயர் போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதிபெறப்போவது யார்? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா இன்றைய போட்டியில் வெற்றிபெறப்போகும் அணி குறித்த தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

GT vs MI 1

அந்தவகையில் ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இந்த போட்டியில் வெற்றிபெற இரு அணிகளுக்குமே 50 – 50 சதவீதம் வாய்ப்புள்ளது. ஏனெனில் இந்த தொடரானது ஆரம்பித்ததில் இருந்து முதல் இடத்தில் இருந்த அணி குஜராத் அணிதான். எனவே அவர்களை மும்பை அணி வீழ்த்துவது எளிதாக இருக்காது.

- Advertisement -

அதேபோன்று இந்த தொடரின் துவக்கத்தில் தடுமாறினாலும் தற்போது சரியான நேரத்தில் முமென்ட்டத்தை பெற்று தொடர்ச்சியாக வெற்றிபெற்று வரும் மும்பை அணியையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. மும்பை இந்தியன்ஸ் போன்ற சாம்பியன் அணியை வீழ்த்த வேண்டுமெனில் அதற்கு நீங்கள் உங்கள் முழு பலத்தையும் வெளிப்படுத்தியாக வேண்டும்.

இதையும் படிங்க : நாடு முக்கியம் தான் ஆனா பணம் அதை விட முக்கியம் – வதந்தியை உண்மையாக்கும் அறிவிப்பை வெளியிட்ட இங்கிலாந்து வீரர்

அந்தவகையில் இந்த போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தினை அளிக்கும். என்னைப்பொறுத்தவரை இந்தப்போட்டியில் இரு அணிகளுக்குமே 50% வெற்றிக்கு வாய்ப்பு இருப்பதாக தான் பார்ப்பதாக ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement