வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை நேற்று பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் துவங்க இருக்கும் இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் என இரண்டு அணிகளும் தனித்தனியே அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான இந்த இரண்டு அணிகளிலும் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும், சில வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் இருக்கிறது.
அந்த வகையில் டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் பேட்ஸ்மேனான புஜாராவிற்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. சமீப காலமாகவே மோசமான ஃபார்ம் காரணமாக திணறி வரும் புஜாரா கவுண்ட் கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இந்திய அணியில் தொடர்ச்சியாக நீடித்து வந்தார்.
ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் சோபிக்க தவறிய புஜாராவை தற்போது இந்திய அணியின் நிர்வாகம் அதிரடியாக அணியில் இருந்து கழற்றிவிட்டுள்ளது.
மேலும் 35 வயதான புஜாரா நூறு போட்டிகளுக்கு மேல் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று விளையாடிவிட்டதால் இனி அவர் கம்பேக் கொடுப்பது என்பது முடியாத காரியம் என்றே கூறப்படுகிறது. இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் அவரது இடத்தை நிரப்புப்போகும் வீரர் யார்? என்பது குறித்து கேள்வி அதிகரித்துள்ளது.
ஏனெனில் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் வீரர் பொறுமையாக நின்று மிகப்பெரிய இன்னிங்சை கட்டமைக்க வேண்டிய பொறுப்பு அவர்களிடம் உள்ளது. இந்நிலையில் எதிர்வரும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் அவரது மூன்றாவது இடத்தில் இளம் வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வாலே களம் இறங்குவார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : ப்ளீஸ் ரஞ்சி கோப்பைய நிறுத்திடுங்க, தரமான அவர ஏன் செலக்ட் பண்ணல? இளம் வீரருக்காக தேர்வுக்குழுவை விளாசிய கவாஸ்கர்
ஏனெனில் ஐபிஎல் மட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ரன்களை மலைபோல் குவித்து வரும் இவர் நிச்சயம் மூன்றாவது இடத்தில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று அணி நிர்வாகம் அதிக நம்பிக்கை வைத்துள்ளதால் அவரே புஜாராவின் இடத்தை நிரப்புவார் என்று தெரிகிறது.