ஜஸ்ட் 1 ரன் போதும்.. கோலியின் சாதனையை முறியடிக்கப்போகும் ஜெய்ஸ்வால் – மேலும் 2 சாதனைகள் படைக்கவும் வாய்ப்பு

Jaiswal-and-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணியானது இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் அடுத்ததாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி மார்ச் 7-ஆம் தேதி தர்மசாலா நகரில் நடைபெற இருக்கிறது.

இந்த ஐந்தாவது போட்டியில் பங்கேற்று விளையாட இருக்கும் இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் தருவாயில் உள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நடப்பு தொடரில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் 2 இரட்டை சதம் மற்றும் 2 அரைசதம் என 655 ரன்கள் குவித்திருக்கிறார்.

- Advertisement -

இதன்மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரரான விராட் கோலியின் சாதனையை சமன் செய்திருக்கிறார். மேலும் எதிர்வரும் ஐந்தாவது போட்டியில் இவர் ஒரு ரன் அடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

அது மட்டுமின்றி மேலும் இரண்டு விராட் கோலியின் சாதனைகளையும் அவர் முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது. அந்த சாதனைகள் யாதெனில் : ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக சுனில் கவாஸ்கர் இருமுறை 700 ரன்கள் அடித்து முதல் இரண்டு இடங்களில் இருக்கும் வேளையில் விராட் கோலி அவருக்கு அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் 692 ரன்கள் குவித்து மூன்றாவது இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மேலும் 38 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் விராட் கோலியை முந்தி ஒரு டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் அடித்த வீரராக விராட் கோலியை பின்னுக்கு தள்ளி மூன்றாவது இடத்தை பிடிப்பார். அதோடு இதுவரை இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள் அடித்த வீரர்களாக விராட் கோலியும், ஜெய்ஸ்வாலும் தலா இரண்டு சதங்களுடன் சமநிலையில் உள்ளனர்.

இதையும் படிங்க : இதற்குத் தான் ஆசைப்பட்டீங்களா? வார்னர், வில்லியம்சன் வரிசையில் மாற்றம்.. புதிய கேப்டனை அறிவித்த ஹைதராபாத்

இந்நிலையில் எதிர்வரும் ஐந்தாவது போட்டியில் ஜெய்ஸ்வால் மேலும் ஒரு சதமடிக்கும் பட்சத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரே தொடரில் மூன்று சதங்கள் அடித்த இந்திய வீரர்கள் படியலில் ராகுல் டிராவிட் மற்றும் அசாருதீன் ஆகியோருடன் ஜெய்ஸ்வாலும் இணைவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement