- Advertisement -
இந்திய கிரிக்கெட்

வலைப்பயிற்சியில் ஏற்பட்ட மாற்றம்.. ரோஹித் சர்மாவின் இடத்திற்கு காத்திருக்கும் ஆபத்து – விவரம் இதோ

இந்திய அணியின் நட்சத்திர துவக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய முடித்த பின்னர் ஏழு மாதங்களுக்கு பிறகு மீண்டும் இந்திய அணியில் தற்போது விளையாடி வருகிறார். ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர் ஒருநாள் போட்டியில் மட்டுமே விளையாடி வருகிறார். அதிலும் குறிப்பாக 2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும் என்கிற விருப்பத்தை அவர் வெளிப்படையாகவே அறிவித்திருந்தார்.

ரோஹித் சர்மாவின் இடத்திற்கு வரவுள்ள ஆபத்து :

ஆனாலும் தற்போது 38 வயதான அவரை எதிர்கால திட்டத்தில் வைக்கலாமா? அல்லது அவரை நீக்கிவிட்டு இளம் வீரர்களை கொண்டு வரலாமா? என்கிற கருத்து பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதோடு இந்திய அணியின் நிர்வாகமும் ரோகித் சர்மா குறித்து உறுதியான முடிவு எதையும் எடுக்காததால் அவர் ஓய்வை நோக்கி தள்ளப்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் அவர் இடம்பெற வேண்டுமெனில் இனிவரும் தொடர்களில் ரோகித் சர்மா சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவ்வேளையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் 8 ரன்களை மட்டுமே எடுத்து ஆட்டமிழந்த அவர் மீது விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

இவ்வேளையில் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது அவர் பிளேயிங் லெவனில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நாளை நடைபெறவிருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் இந்த தொடரை இழந்து விடும் என்பதனால் அடுத்த போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியமான போட்டியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக தற்போது வலைப்பயிற்சியில் சுப்மன் கில்லுடன் இணைந்து ஜெய்ஸ்வால் பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அதேவேளையில் ரோகித் சர்மா தனியாக பயிற்சிகளை மேற்கொண்டு இருந்தார். அந்நேரத்தில் இந்திய அணியின் பயிற்சியாளரான கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகிய இருவரும் ஜெய்ஸ்வாலுடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க : இதுமட்டும் நடந்திருந்தா நானும் சச்சினை விட 5000 ரன்கள் அதிகமா அடிச்சிருப்பேன் – மைக்கல் ஹஸி ஓபன்டாக்

இந்த சந்திப்பே யாஷஸ்வி ஜெய்ஸ்வாலை அடுத்த போட்டியில் களமிறக்க இருப்பதற்காகவே நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்படி ஜெய்ஸ்வால் அடுத்த போட்டியில் களம் இறக்கப்பட்டால் ரோகித் சர்மாவின் இடத்திற்கு ஆபத்து ஏற்படும் என்பது உறுதி.

- Advertisement -