IPL 2023 : சத்தமின்றி 360 டிகிரியிலும் அடிக்கும் அவர் சீக்கிரம் இந்தியாவுக்கு சதங்களை அடிக்க போறாரு – மைக்கேல் வாகன் பாராட்டு

Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி இந்தியாவுக்காக விளையாட வேண்டுமென்ற கனவுடன் விளையாடி வரும் நிறைய இளம் இந்திய வீரர்களுக்கு மத்தியில் ராஜஸ்தான் அணிக்காக அதிரடியாக செயல்பட்டு வரும் யசஸ்வி ஜெய்ஸ்வால் 42வது லீக் போட்டியின் முடிவில் 428 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்து ஆரஞ்சு தொப்பியை வென்றுள்ளார். 2019இல் உள்ளூர் கிரிக்கெட்டில் மும்பைக்காக அறிமுகமாகி நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 2020 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையில் 400 ரன்கள் குவித்து இந்தியா ஃபைனலுக்கு தகுதி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.

சாதாரண பானிபூரி விற்கும் தந்தையின் மகனாக சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் 2020இல் 2.40 கோடிக்கு ராஜஸ்தான் அணிக்காக வாங்கப்பட்ட அவர் 2021, 2022, 2023 சீசன்களில் முறையே 40, 249, 258, 428* என ஒவ்வொரு வருடமும் அதிகமாக ரன்களை எடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக வான்கடே மைதானத்தில் நடைபெற்ற வரலாற்றின் 1000வது ஐபிஎல் போட்டியில் ஜோஸ் பட்லர் 18, சஞ்சு சாம்சன் 14, ஹெட்மயர் 8 என இதர பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி வெறும் 63 ரன்கள் எடுத்த நிலையில் தனி ஒருவனாக மும்பை பவுலர்களை பந்தாடிய அவர் 16 பவுண்டரி 8 சிக்ஸருடன் சதமடித்து 124 (62) ரன்கள் விளாசி ராஜஸ்தான் 212/7 ரன்கள் குவிக்க உதவினார்.

- Advertisement -

அரிதான திறமை:
இருப்பினும் சூரியகுமார் யாதவ்,, கேமரூன் கிரீன், டிம் டேவிட் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்களின் அதிரடியால் மும்பை வென்ற போதிலும் அற்புதமான பேட்டிங்கை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வாலுக்கு ஆட்டநாயகன் விருது சமர்ப்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் மட்டுமல்லாமல் சமீப காலங்களாகவே ரஞ்சிக்கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் தொடர்ந்து அசத்தி வரும் ஜெய்ஸ்வால் தமக்கு பிடித்த புதிய இந்திய வீரராக செயல்பட்டு வருவதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

அத்துடன் சத்தமின்றி 360 டிகிரியிலும் அடிக்கும் அரிதான திறமை கொண்ட அவர் இன்னும் ஓரிரு வருடங்களில் இந்தியாவுக்காக இதே வான்கடே மைதானத்தில் சதங்களை அடிப்பார் என்று நம்பிக்கை தெரிவிக்கும் அவர் இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் பேசியது பின்வருமாறு. “அந்த இன்னிங்ஸ் பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவர் அரிதான திறமை கொண்டவர். இப்போதே பாராட்டி அதிக அழுத்தத்தை ஏற்படுத்த விரும்பவில்லை என்றாலும் அவர் வெறும் 62 பந்துகளில் 124 ரன்களை 200 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். சொல்லப்போனால் அவர் அவுட்டாகவில்லை ஏனெனில் அது நோ-பாலாகும்”

- Advertisement -

“இருப்பினும் இந்த ஸ்பெஷல் இன்னிங்ஸை நாம் நீண்ட காலம் நினைவில் வைத்திருப்போம். இந்த டி20 கிரிக்கெட்டில் ஏராளமான சிறந்த இன்னிங்ஸ் இருக்கிறது. அதிரடியாக விளையாடும் நிறைய வீரர்கள் காணப்படுகின்றனர். ஆனால் இன்னும் சில வருடங்கள் கழித்தும் கூட இந்த இன்னிங்ஸை நாம் நினைவில் வைத்திருப்போம். என்னை கேட்டால் விரைவில் அவர் இந்தியாவுக்காக அறிமுகமாகி நிறைய சதங்களை அடிப்பார். அப்போது நாம் இப்போட்டியில் அவர் அடித்த முதல் சதத்தை நினைவில் வைத்து பாராட்டுவோம். ஏனெனில் இது ஸ்பெஷல் இன்னிங்ஸ்”

“அத்துடன் அவரிடம் அனைத்து விதமான ஷாட்டுகளும் இருக்கிறது. குறிப்பாக 360 டிகிரியிலும் அடிக்கும் அவரிடம் நவீன கிரிக்கெட்டில் அசத்தும் திறமை இருக்கிறது. இந்த உலகில் இருக்கும் சிறந்த வீரர்கள் எப்போதும் மைதானத்தின் 360 டிகிரியிலும் அடிக்கும் திறமையைக் கொண்டிருப்பார்கள். அதே போல திறமையும் மன தைரியத்தையும் கொண்டுள்ள அவர் அடுத்த சில வருடங்களில் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்க்க காத்திருக்கிறேன்” என்று கூறினார்.

இதையும் படிங்க:PBKS vs MI : மும்பையை புரட்டி எடுத்த பஞ்சாப் – 15 வருட ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த அணியும் படைக்காத மாஸ் வரலாற்று சாதனை

அதற்கேற்றார் போல் இப்போட்டியில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் ராஜஸ்தான் அணிக்காக மட்டுமல்லாமல் வருங்காலங்களில் இந்தியாவுக்காக அசத்தும் திறமை கொண்டிருப்பதாக கேப்டன் ரோஹித் சர்மா போட்டியின் முடிவில் மனதார பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement