PBKS vs MI : மும்பையை புரட்டி எடுத்த பஞ்சாப் – 15 வருட ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த அணியும் படைக்காத மாஸ் வரலாற்று சாதனை

PBKS vs MI Jofra Archer Jitesh Sharma
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 3ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு பஞ்சாப் மாநில மொகாலியில் நடைபெற்ற 46வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ப்ரப்சிம்ரன் சிங் 9 (7) ரன்களில் ஆரம்பத்திலேயே அவுட்டாகி சென்றார். இருப்பினும் அடுத்து வந்த மேத்யூ சார்ட் உடன் கை கோர்த்த மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் ஷிகர் தவான் 2வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரியுடன் 30 (20) ரன்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் அதிரடியாக செயல்பட்ட நிலையில் அடுத்த சில ஓவர்களிலேயே மறுபுறம் தடுமாறிய மேத்யூ சார்ட் 2 பவுண்டரி 1 சிக்சருடன் 27 (26) ரன்களில் பியூஸ் சாவ்லா சுழலில் போல்டானார். அந்த நிலைமையில் வந்த ஜித்தேஷ் சர்மா வழக்கம் போல தன்னுடைய விக்கெட்டைப் பற்றி கவலைப்படாமல் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடியை தொடங்கி மும்பை பவுலர்களை அடித்து நொறுக்கினார். அவருடன் மறுபுறம் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய லியம் லிவிங்ஸ்டன் விரைவாக ரன்களை சேர்த்து அரை சதமடித்தார்.

- Advertisement -

மிரட்டல் சாதனை:
அந்த வகையில் 12வது ஓவரில் ஜோடி சேர்ந்து ஓவருக்கு 10க்கும் மேற்பட்ட ரன்களை பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்ட இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல நங்கூரமாகவும் அதிரடியாகவும் செயல்பட்டு டெத் ஓவர்களில் ஏற்கனவே திணறி வரும் மும்பை பவுலர்களுக்கு கருணை காட்டாமல் சரமாரியாக அடித்தனர். குறிப்பாக ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரின் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட லிவிங்ஸ்டன் தொடர்ந்து அதே வேகத்தில் சரவெடியாக விளையாடி 7 பவுண்டரி 4 சிக்ஸருடன் 82* (42) ரன்களை விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார்.

அவருடன் தனது பங்கிற்கு மிரட்டிய ஜிதேஷ் சர்மா 5 பவுண்டர் 2 சிக்சருடன் 49* (27) ரன்கள் விளாசியதால் 20 ஓவர்களில் பஞ்சாப் 214/3 ரன்கள் குவித்தது. சுமாராக பந்து வீசிய மும்பை சார்பில் அதிகபட்சமாக பியூஸ் சாவ்லா சிறப்பாக செயல்பட்டு 4 ஓவரில் 29 ரன்கள் மட்டும் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். அதை விட இதே மும்பைக்கு எதிராக இந்த சீசனில் நடைபெற்ற முந்தைய போட்டியில் 214/8 ரன்களை குவித்த பஞ்சாப் அதன் பின் நடைபெற்ற லக்னோவுக்கு எதிராக போட்டியில் 201/10 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில் 201/6 குவித்த அந்த அணி தற்போது இந்த போட்டியிலும் 214/3 ரன்கள் அடித்துள்ளது. அதாவது கடைசியாக களமிறங்கிய 4 போட்டிகளில் தொடர்ந்து 4வது முறையாக பஞ்சாப் 200க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளது. இதன் வாயிலாக 15 வருட ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து 4 போட்டிகளில் 4 முறை 200+ ஸ்கோர்களை பதிவு செய்த முதல் அணி என்ற மிரட்டலான சாதனையை படைத்துள்ள பஞ்சாப் புதிய வரலாறு படைத்துள்ளது.

இதற்கு முன் வரலாற்றில் சென்னை, மும்பை உட்பட எந்த அணிகளும் தொடர்ச்சியாக 4 போட்டிகளில் இப்படி 200+ ரன்களை அடித்ததே கிடையாது. குறிப்பாக 2022இல் கொல்கத்த்தா 3 தொடர்ச்சியான போட்டிகளில் 200+ ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும். அந்த அளவுக்கு மீண்டும் பந்து வீச்சில் ரன்களை வாரி வழங்கிய மும்பை இப்போட்டியில் வெற்றி காண்பதற்கு பேட்டிங்கில் அதைத் துரத்தி வருகிறது.

Advertisement