சேவாக் போல முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகளை தெறிக்க விட்ட ஜெய்ஸ்வால், போராடிய டெல்லி – ராஜஸ்தான் மீண்டும் அதிரடி ஸ்கோர்

Yashasvi Jaiswal
- Advertisement -

இந்திய கிரிக்கெட் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதியன்று நடைபெறும் 2 போட்டிகளில் மதியம் 3.30 மணிக்கு கௌகாத்தியில் நடைபெற்ற 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. அதில் தன்னுடைய முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்ததால் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி டாஸ் வென்று முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் டெல்லியை கதிகலங்க வைக்கும் அளவுக்கு கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே அடுத்தடுத்த 5 பவுண்டரிகளை தெறிக்க விட்டு 20 ரன்களை விளாசிய ஜெய்ஸ்வால் மிரட்டலான தொடக்கம் கொடுத்தார்.

குறிப்பாக முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் இடது கை பேட்ஸ்மேனாக விளையாடினால் எப்படி இருக்குமோ அதே போல ஜெய்ஸ்வால் விளையாடியதாக ராஜஸ்தான் நிர்வாகம் ட்விட்டரில் அவரை மனதார பாராட்டியது. அவருடன் தனது பங்கிற்கு அதிரடியாக விளையாடிய ஜோஸ் பட்லர் டெல்லி பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்டார். அப்படி பவர்பிளே ஓவர்களில் சரவெடியாக செயல்பட்ட இந்த ஜோடி 6 ஓவரில் 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானுக்கு அற்புதமான தொடக்கம் கொடுத்தது.

- Advertisement -

அதிரடி ஸ்கோர்:
அதே வேகத்தில் அதிரடியாக விளையாடிய யசஸ்வி ஜெய்ஸ்வால் முதல் ஆளாக அரை சதமடித்து 98 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து 11 பவுண்டரி 3 சிக்சருடன் 60 (31) ரன்கள் குவித்து ஒரு வழியாக முகேஷ் குமாரிடம் அவுட்டானார். அந்த நிலைமையில் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் எதிர்பாரா வகையில் குல்தீப் யாதவ் சுழலில் டக் அவுட்டாகி சென்ற நிலையில் அடுத்ததாக களமிறங்கிய இளம் ரியன் பராக் மீண்டும் தடவலாக செயல்பட்டு 7 (11) ரன்னில் நடையை கட்டினார்.

இருப்பினும் மறுபுறம் நங்கூரமாகவும் அதிரடியாகவும் செய்யப்பட்ட ஜோஸ் பட்லர் அரை சதமடித்து ரன் ரேட்டை தொடர்ந்து சரிய விடாத வகையில் பேட்டிங் செய்தார். அவருடன் அடுத்ததாக களமிறங்கிய சிம்ரோன் விரைவாக ரன்களை சேர்த்த போது சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜோஸ் பட்லர் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 79 (51) ரன்களில் கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இறுதியில் 4 சிக்ஸர்களையும் 1 பவுண்டரியும் பறக்க விட்ட சிம்ரோன் ஹெட்மையர் அதிரடியாக 39* (21) ரன்கள் குவித்து சூப்பர் பினிஷிங் கொடுக்க துருவ் ஜுரேல் 8* (3) ரன்கள் எடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 199/4 ரன்கள் எடுத்தது. முன்னதாக ஆரம்பத்திலேயே ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோர் சரவெடியாக பேட்டிங் செய்ததால் ராஜஸ்தான் உறுதியாக 200 ரன்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனாலும் மிடில் ஓவர்களில் ஓரளவு கட்டுப்பாட்டுடன் செயல்பட்டு மினி கம்பேக் கொடுத்த டெல்லி மீண்டும் டெத் ஓவர்களில் சுமாராக செயல்பட்டு ரன்களை வாரி வழங்கியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முகேஷ் குமார் 2 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து ராஜஸ்தான் தரமான பந்து வீச்சு கூட்டணியை கொண்டுள்ள நிலையில் 200 ரன்களை அந்த அணி வெற்றிகரமாக துரத்துமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: வீடியோ : சேவாக் முதல் ஓவரிலேயே 5 பவுண்டரிகளை தெறிக்க விட்ட ஜெய்ஸ்வால், போராடிய டெல்லி – ராஜஸ்தான் மீண்டும் அதிரடி ஸ்கோர்

ஏனெனில் கடந்த இரண்டு போட்டிகளில் டேவிட் வார்னர் உட்பட அந்த அணியின் அனைத்து முக்கிய பேட்ஸ்மேன்களும் அதிரடியாக விளையாடாமல் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் மிட்சேல் மார்ஷ் இப்போட்டியில் தனது திருமணத்திற்காக நாடு திரும்பியுள்ளதால் களமிறங்கவில்லை. ஆனாலும் முதல் வெற்றியை பதிவு செய்யும் வெறியுடன் டெல்லி பேட்டிங் செய்வது குறிப்பிடத்தக்கது

Advertisement