நீங்க மும்பைகாரர் அதான் மும்பை வீரருக்கு சப்போர்ட் பண்றிங்க – 2023 உ.கோ இந்திய அணியை தேர்வில் மஞ்ரேக்கருக்கு ஸ்ரீகாந்த் பதிலடி

Srikkanth Sanjay Manjrekar
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கியுள்ள 10 அணிகளில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி இந்திய அணியில் நிலையான இடத்தை பிடிப்பதற்கு நிறைய வீரர்கள் முயற்சித்து வருகிறார்கள். குறிப்பாக இந்த ஐபிஎல் தொடரில் அசத்தலாக செயல்படும் வீரர்கள் அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கான இந்திய உத்தேச அணியில் தேர்வாக அதிக வாய்ப்புள்ளது. அந்த வாய்ப்புகளில் அடுத்து நடைபெறும் இருதரப்பு தொடர்களில் அசத்தும் வீரர்களுக்கு உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்லலாம்.

- Advertisement -

குறிப்பாக ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகிய 3 முக்கிய வீரர்கள் காயத்தால் இந்த உலகக்கோப்பையில் பங்கேற்க மாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அவர்களுக்கு பதிலாக தகுதியான மாற்று வீரர்களை கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ள இந்திய அணி நிர்வாகம் மற்றும் தேர்வு குழுவை இந்த ஐபிஎல் தொடரில் கவரும் வகையில் செயல்பட்டு உலகக் கோப்பையில் விளையாட நிறைய வீரர்கள் போட்டி போடத் துவங்கியுள்ளார்கள். அந்த நிலையில் உலகக் கோப்பை துவங்குவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் உத்தேச இந்திய அணியில் விளையாடும் வீரர்களை முன்னாள் வீரர்கள் தேர்வு செய்து வருகிறார்கள்.

நீங்க மும்பைகாரர்:
அந்த வகையில் ஐபிஎல் தொடரில் வர்ணையாளராக செயல்பட்டு வரும் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தன்னுடைய உத்தேச 11 பேர் இந்திய அணியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் தேர்வு செய்தார். குறிப்பாக கடைசியாக 2011ஆம் ஆண்டு சொந்த மண்ணில் எம்எஸ் தோனி தலைமையில் 28 வருடங்கள் கழித்து உலக கோப்பையை வென்று சரித்திரம் படைத்த இந்திய அணியை அப்போதைய தேர்வுக்குழு தலைவராக தேர்வு செய்த பெருமைக்குரிய அவர் இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணியை தேர்வு செய்து பேசியது பின்வருமாறு.

Srikanth

“என்னுடைய அணியில் சுப்மன் கில், ரோகித் சர்மா, விராட் கோலி ஆகிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுடன் 4வது இடத்தில் இப்போதும் சூரியகுமார் யாதவ் இருப்பார். 5வது இடத்தில் விக்கெட் கீப்பராக கேஎல் ராகுல் மற்றும் 6வது இடத்தில் ஹர்திக் பாண்டியா இருப்பார்கள். 7வது இடத்தில் ரவீந்திர ஜடேஜா அவர்களைத் தொடர்ந்து அக்சர் பட்டேல் முகமது ஷமி, முகமது சிராஜ்” என்று கூறினார். அப்போது அதே நிகழ்ச்சியில் வர்ணனை செய்த மற்றொரு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் மும்பையைச் சேர்ந்த ஆல் ரவுண்டர் ஷார்துல் தாகூர் இந்திய 11 பேர் அணியில் மிகவும் பயனுள்ளவராக இருப்பார் என்பதால் அவரை தாராளமாக தேர்வு செய்யலாம் என்று பதிலளித்தார்.

- Advertisement -

குறிப்பாக பெங்களூருவுக்கு எதிரான போட்டியில் 68* ரன்களையும் 1 விக்கெட்டையும் எடுத்த காரணத்தால் சஞ்சய் மஞ்ரேக்கர் அவருக்கு ஆதரவு கொடுத்தார். ஆனால் அதை மறுத்த ஸ்ரீகாந்த் நீங்கள் மும்பையை சேர்ந்தவர் என்பதற்காக மும்பையைச் சேர்ந்த தாக்கூரை சேர்க்க முடியாது ஏனெனில் அவர் ஒரு சில விக்கெட்டுகளை எடுத்தாலும் ஓவருக்கு 12 ரன்கள் வாரி வழங்கி விடுவார் என்று நேரடியாகவே பதிலடி கொடுத்தார். அது பற்றி ஸ்ரீகாந்த் மேலும் பேசியது பின்வருமாறு.

Sanjay

“ஷார்துல் வேண்டாம். அர்ஷிதீப் சிங் வேண்டுமானால் இருக்கலாம். ஷார்துல் விக்கெட்டுகளை எடுப்பார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதே சமயம் அவர் ஓவருக்கு 12 ரன்களை வழங்குவார். இருப்பினும் நீங்கள் மும்பையைச் சேர்ந்தவர் என்பதாலேயே ஷார்துல் பெயரை இங்கே சொல்கிறீர்கள். அத்துடன் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகிய மூவரில் இருவர் இந்த 11 பேர் அணியில் ஸ்பின்னர்களாக விளையாட தகுதியானவர்கள்” என்று கூறினார்.

இதையும் படிங்க:IPL 2023 : அவருக்கு எதிரா விளையாடுவது ரொம்ப கஷ்டம், மைண்ட் கேம்ல கடுப்பேடுத்துவாரு – இந்திய கேப்டனை பாராட்டும் உத்தப்பா

அதை ஸ்ரீகாந்த் சிரித்த வாக்கிலேயே கூறியதால் கோபமடையாத சஞ்சய் மஞ்ரேக்கர் மற்றும் யூசுப் பதான் உள்ளிட்ட அனைத்து வர்ணனையாளர்களும் நேரலையில் சிரித்து மகிழ்ந்தனர்.

Advertisement