IPL 2023 : அவருக்கு எதிரா விளையாடுவது ரொம்ப கஷ்டம், மைண்ட் கேம்ல கடுப்பேடுத்துவாரு – இந்திய கேப்டனை பாராட்டும் உத்தப்பா

Uthappa
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் 5வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடி வரும் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் குஜராத்திடம் தோல்வியை சந்தித்தாலும் லக்னோவுக்கு எதிராக 2வது போட்டியில் வென்று வெற்றி பாதைக்கு திருப்பியுள்ளது. குறிப்பாக 2019க்குப்பின் 4 வருடங்கள் கழித்து சேப்பாக்கத்தில் நடைபெற்ற லக்னோவுக்கு எதிரான போட்டியில் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவதற்கு கடைசி ஓவரில் களமிறங்கிய கேப்டன் தோனி அதிரடியான வேகத்தில் வீசக்கூடிய மார்க் வுட் பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்டு வெற்றியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி 41 வயதானாலும் தம்முடன் பிறந்த ஃபினிஷிங் ஸ்டைல் எப்போதும் தம்மை விட்டு போகாது என்பதை நிரூபித்தார்.

MS-Dhoni

- Advertisement -

இந்தியாவுக்காக 3 விதமான உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சாதனை படைத்த அவர் ஐபிஎல் தொடரிலும் 4 கோப்பைகளை வென்று 2வது வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். மேலும் 2008இல் ஐபிஎல் துவங்கப்பட்ட போது இருந்த 8 அணிகளில் கேப்டனாக செயல்பட்ட கங்குலி, சச்சின் போன்றவர்கள் ஓய்வு பெற்ற விட்ட நிலையில் 15 வருடங்கள் கழித்து இப்போதும் விளையாடும் ஒரே கேப்டனாக தோனி செயல்பட்டு வருவது அவருடைய திறமை மற்றும் ஃ
பிட்னஸ் ஆகியவற்றுக்கு சான்றாகும்.

உத்தப்பா பாராட்டு:
அத்துடன் ஒரு சில சீசன்கள் தாக்கு பிடிக்க முடியாத பல கேப்டன்களுக்கு மத்தியில் பல வருடங்களாக வெற்றிகரமாக கேப்டனாக தோனி செயல்படுவதற்கு அழுத்தமான தருணங்களிலும் சிறப்பாக செயல்படும் கேப்டன்ஷிப் பண்புகளே முக்கிய காரணமாகும். மேலும் ஒவ்வொரு வீரர்களின் திறமையை உணர்ந்து அவர்களுக்கு வாய்ப்பும் சுதந்திரமும் கொடுத்து அவர்களுடைய சிறந்த செயல்பாடுகளை வெளிக்கொண்டு வருவதிலும் தோனி தனித்துவம் பெற்றவர்.

Dhoni

இந்நிலையில் தோனி கேப்டன்ஷிப் செய்யும் அணிக்கு எதிராக எதிரணியில் பேட்ஸ்மேனாக விளையாடுவது மிகவும் கடினமான ஒன்று என அவரது தலைமையில் 2021, 2022 சீசன்களில் விளையாடிய ராபின் உத்தப்பா கூறியுள்ளார். குறிப்பாக பேட்ஸ்மேன்கள் எந்த சூழ்நிலையில் என்ன நினைக்கிறார்கள் என்பதை படித்து அதற்கேற்றார் போல் ஃபீல்டிங் செட்டப் செய்து அவர்களுடைய விக்கெட்டுகளை எடுப்பதில் தோனி மகத்தானவர் என்றும் உத்தப்பா கூறியுள்ளார். அதனால் அவருக்கு எதிராக பேட்டிங் செய்யும் போது கடுப்பேற்றி விடுவார் என்று தெரிவிக்கும் உத்தப்பா இது பற்றி 2 எடுத்துக்காட்டுகளுடன் ஜியோ சினிமா சேனலில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“சிஎஸ்கே அணிக்கு எதிராக நான் விளையாடிய போது பலமுறை மிகவும் எரிச்சலடைந்துள்ளேன். குறிப்பாக தோனி மீது நான் மிகவும் எரிச்சலடைவேன். ஒருமுறை சென்னைக்கு எதிரான ஒரு போட்டியில் ஹேசல்வுட் பந்து வீசிய போது ஃபைன் லெக் ஃபீல்டர் இல்லாமல் இருந்தார். எனவே அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் திசை கோணத்தில் வெளியே இருந்து ஹேசல்வுட் பந்து வீசுவார் என்று எனக்கு தெரியும். அதனால் டீப் பாய்ண்ட் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சித்த நான் அவுட்டானேன். அதாவது நீங்கள் அதிகமாக விளையாடாத பகுதிகளில் வலுக்கட்டாயமாக தோனி உங்களை அடிக்க வைத்து அவுட்டாக்குவார்”

uthappa

“அந்த வகையில் தோனி எப்போதும் பேட்ஸ்மேன்களின் மனநிலையுடன் விளையாடுவார். அவர் பேட்ஸ்மேன்களை வித்தியாசமாக நினைக்க வைப்பது மட்டுமல்லாமல் தன்னுடைய பவுலர்களையும் வித்தியாசமாக யோசிக்க வைப்பார். குறிப்பாக அவர் தாம் விக்கெட் எடுக்க விரும்பும் இடத்தில் பவுலர்களைப் பந்து வீச வைப்பார். அதே போல் ராஜஸ்தானுக்கு எதிரான மற்றொரு போட்டியில் தேவ்தூத் படிக்கல் பிக் அப் ஷாட்களை சிறப்பாக அடித்துக் கொண்டிருந்தார்”

இதையும் படிங்க:IPL 2023 : இது ஒன்னும் பாகிஸ்தான் தார் ரோட் பிட்ச் இல்ல, இங்கிலாந்தின் விராட் கோலியை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – காரணம் இதோ

“அப்போது “சரி அவரை அதே ஷாட்டை மீண்டும் வலுக்கட்டாயமாக அடிக்க வைப்போம்” என்று சொன்ன தோனி உடனடியாக ஃபைன் லெக் ஃபீல்டரை லெக்-கல்லி திசைக்கு மாற்றி சற்று முன்னதாக நிற்க வைத்து விக்கெட்டையும் எடுத்தார். அப்போது நான் “இந்த ஐடியாக்கள் இவருக்கு எப்படி வருகிறது” என்று ஆச்சரியத்துடன் நினைத்தேன்” என கூறினார்.

Advertisement