எப்படி நீங்க தரமுடியாதுன்னு சொல்லலாம்.. 4வது அம்பயருடன் வெறித்தன முகத்துடன்வாக்குவதம் செய்த கம்பீர்

Gautam Gambhir 2
- Advertisement -

ரசிகர்களுக்கு விருந்து படைத்து வரும் ஐபிஎல் 2024 தொடரின் 42வது போட்டியில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அதனால் தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது. ஈடன் கார்டன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் விளையாடிய கொல்கத்தா 262 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக பில் சால்ட் 75, சுனில் நரேன் 71 ரன்கள் எடுத்தனர். அதை சேசிங் செய்த பஞ்சாப்புக்கு துவக்க வீரர்கள் ப்ரப்சிம்ரன் சிங் 54 (20), ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 108* ரன்கள் விளாசி அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் ரிலீ ரோசவ் 26 (16), சசாங் சிங் 68* (28) ரன்கள் விளாசி 18.4 ஓவரிலேயே பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

கோபமான கம்பீர்:
அதனால் ஐபிஎல் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் ஒரு போட்டியில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற மாபெரும் உலக சாதனையை பஞ்சாப் படைத்தது. மறுபுறம் 261 ரன்களை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு படுமோசமாக பந்து வீசிய கொல்கத்தா சொந்த மண்ணில் தலைகுனியும் தோல்வியை சந்தித்தது.

முன்னதாக இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணிக்கு ராகுல் சகார் வீசிய 14வது ஓவரின் கடைசி பந்தை எதிர்கொண்ட ஆண்ட்ரே ரசல் கவர்ஸ் திசையில் அடித்தார். அதை பஞ்சாப் வீரர் அசுடோஸ் சர்மா அபாரமாக ஃபீல்டிங் செய்து உள்வட்டத்திற்குள்ளேயே பந்தை தடுத்து நிறுத்தி விக்கெட் கீப்பரிடம் எறிந்தார். அதனால் ரசல் சிங்கிள் எடுக்க வேண்டாமென முடிவெடுத்து விட்டார்.

- Advertisement -

மறுபுறம் அசுடோஸ் சர்மா வீசிய பந்து அகலமாக வந்ததால் விக்கெட் கீப்பர் அதை பிடிக்கத் தவறினார். அதை பயன்படுத்திய ரசல் சிங்கிள் எடுத்தார். ஆனால் களத்தில் இருந்த நடுவர் அனில் சௌத்ரி அந்த 1 ரன்னை தர முடியாது என்று சொல்லி விட்டார். குறிப்பாக அசுடோஸ் பந்தை நிறுத்தியதும் ரசல் சிங்கிள் வேண்டாம் என்று நின்று விட்டதால் அப்போதே அந்த பந்து காலாவதியாகி விட்டதாக கருதிய நடுவர் சௌத்ரி 1 ரன் வழங்கவில்லை.

இதையும் படிங்க: 4 பேட்ஸ்மேன்கள் 200 ஸ்ட்ரைக் ரேட்டில் காட்டடி.. பஞ்சாப் – கொல்கத்தா போட்டியில் நிகழ்ந்த 17 வருட அரிதான உலக சாதனை

அதற்கு களத்தில் இருந்த ரசல் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஆனால் பெவிலியனில் இருந்த கொல்கத்தா அணி ஆலோசகர் கௌதம் கம்பீர் 4வது அம்பயருடன் “எப்படி நீங்கள் எங்களுக்கு 1 ரன் தரமுடியாது என்று சொல்லலாம்” என வெறித்தனமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆனால் நாங்கள் விதிமுறைக்கு உட்பட்டே செயல்பட்டதால் அந்த 1 ரன்னை தர முடியாது என மீண்டும் 4வது நடுவர் கராராக தெரிவித்து விட்டார். அதனால் கௌதம் கம்பீர் அதிருப்தியுடன் மீண்டும் பெவிலியனில் சென்று அமர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement