வெல்டன் நண்பா.. அங்கயே உங்க உழைப்பை பாத்துருக்கேன்.. பஞ்சாப் நாயகன் சசாங் சிங்கிற்கு ஸ்டைன் பாராட்டு

Dale Styen 4
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் கொல்கத்தாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் அணி தங்களுடைய 3வது வெற்றியை பதிவு செய்து பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது. ஏப்ரல் 26 ஆம் தேதி ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 262 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக பில் சால்ட் 75, சுனில் நரேன் 71 ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த பஞ்சாப் அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் ப்ரம்சிம்ரன் சிங் 54, ஜானி பேர்ஸ்டோ 108* ரன்கள் அடித்து அற்புதமான துவக்கத்தை கொடுத்தனர். அதை வீணடிக்காமல் ரிலீ ரோசவ் 26 ரன்கள் எடுத்த நிலையில் கடைசியில் சசாங் சிங் 68* (28)யே ரன்கள் குவித்து 18.4 ஓவரிலே ஃபினிஷிங் செய்தார்.

- Advertisement -

ஸ்டைன் பாராட்டு:
அதனால் ஐபிஎல் மட்டுமின்றி ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற தென்னாப்பிரிக்காவின் சாதனையை உடைத்த பஞ்சாப் புதிய உலக சாதனை படைத்தது. முன்னதாக 2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 24 வயதாகும் சசாங் சிங் எனும் வீரரை பஞ்சாப் நிர்வாகம் வாங்க முயற்சித்தது. ஆனால் அதே வீரர்கள் பட்டியலில் 32 வயதாகும் சசாங் சிங்கின் பெயரும் இருந்ததால் அவரை பஞ்சாப் அணிக்கு ஏலதாரர் மல்லிகா ஒப்பந்தம் செய்தார்.

அப்போது பஞ்சாப் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா அவரை வேண்டாம் என்று சொல்லியும் விதிமுறைப்படி ஒப்பந்தம் செய்து விட்டதால் மாற்ற முடியாது என்று மல்லிகா சொல்லி விட்டார். அந்த வகையில் 20 லட்சத்திற்கு தவறுதலாக பஞ்சாப் அணிக்கு சசாங் சிங் வாங்கப்பட்டார். ஆனால் அப்படி தவறுதலாக வாங்கப்பட்ட அவர் குஜராத் அணிக்கு எதிராக கடைசி நேரத்தில் 61 (29) ரன்கள் விளாசி பஞ்சாப் வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார்.

- Advertisement -

அதே போல இப்போட்டியில் முக்கிய நேரத்தில் வந்து 2 பவுண்டரி 8 சிக்சரை பறக்க விட்ட அவர் 68* ரன்கள் விளாசி உலக சாதனை வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார். இந்நிலையில் ஹைதெராபாத் அணியில் பயிற்சியாளராக இருந்த போது சசாங் சிங்கின் கடின உழைப்பை பார்த்துள்ளதாக முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளார். இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க: எப்படி நீங்க தரமுடியாதுன்னு சொல்லலாம்.. 4வது அம்பயருடன் கோபமாக வாக்குவதம் செய்த கம்பீர்.. நடந்தது என்ன?

“சசாங் சிங்கிற்காக இதை விட நான் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. சில வருடங்களுக்கு முன்பாக அவர் ஹைதராபாத் அணியில் எங்களுடன் இருந்தார். கடினமாக உழைக்கக்கூடிய சிறந்த அணி வீரரான அவர் எப்போதும் தன்னுடைய அனைத்தையும் கொடுப்பார். அவருடைய முகத்தில் எப்போதும் சிரிப்பு இருக்கும். வெல்டன் மை ஃபிரண்ட். இதற்காக நீங்கள் தகுதியுடையவர்” என்று நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்

Advertisement