முகமது அஸாருதீனை கடந்து சுனில் கவாஸ்கரை சமன் செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Jaiswal
- Advertisement -

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. சொந்த மண்ணில் நடைபெற்று வரும் இந்த தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது தற்போது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்தங்கியது.

அதனைத்தொடர்ந்து அந்த தோல்விக்கு பழிதீர்க்கும் விதமாக தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

- Advertisement -

அந்தவகையில் முதலில் விளையாடிய இந்திய அணியானது முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்களுடனும், ரவிச்சந்திரன் அஷ்வின் 5 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

மேலும் நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இன்னும் ரன்களை குவித்து இங்கிலாந்து அணிக்கு அழுத்தத்தை கொடுக்க இந்திய அணி காத்திருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 257 பந்துகளை சந்தித்து 17 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 179 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் உள்ளார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த 179 ரன்கள் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் சில சாதனைகளையும் அவர் நிகழ்த்தியுள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஒரு நாளில் அதிகபட்ச ரன்களை குவித்த வீரராக இரண்டாவது இடத்தில் இருக்கும் சுனில் கவாஸ்கரின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.

இதையும் படிங்க : இரட்டை சதம் அப்றம்.. நாளைக்கு இந்திய அணிக்காக அதை செய்வேன்.. 179 ரன்கள் வெளுத்த ஜெய்ஸ்வால் பேட்டி

இங்கிலாந்து அணிக்கெதிராக கருண் நாயர் 2016-ஆம் ஆண்டு ஒரே நாளில் 232 ரன்கள் குவித்திருந்தார். அவருக்கு அடுத்து சுனில் கவாஸ்கர் 179 ரகளை குவித்திருந்த வேளையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (179) அதனை சமன் செய்துள்ளார். இவர்களுக்கு அடுத்து முகமது அசாருதீன் ஒரே நாளில் 175 ரன்கள் அடித்து இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement