ஒரு புள்ளி கூட மாறாமல் சத்தீஸ்வர் புஜாராவின் சாதனையை சமன் செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Jaiswal-and-Pujara
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இதுவரை இரண்டு இரட்டை சதங்கள் உட்பட இந்த தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருகிறார். அவரது இந்த சிறப்பான செயல்பாடுகள் மூலம் பல்வேறு சாதனைகளையும் அவர் இந்த தொடரில் நிகழ்த்தி வருகிறார்.

ஏற்கனவே இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி இந்த தொடரை மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் கைப்பற்றிய வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கி நடைபெற்று வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சில் 218 ரன்களை குவித்தது. பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 135 ரன்கள் குவித்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 58 பந்துகளை சந்தித்து 5 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 57 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அவர் அடித்த இந்த 57 ரன்கள் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் சத்தீஸ்வர் புஜாராவின் ஒரு அரிய சாதனையையும் மிகச் சரியாக சமன் செய்துள்ள விடயம் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் 1000 ரன்களை தொட்டபோது அதிக சராசரியை வைத்து அடித்த வீரர் என்ற சாதனையில் வினோத் காம்ப்ளி 83.33 ரன்கள் சராசரி உடன் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க : இந்த சீரிஸ் புல்லா அவர்தான் நல்லா ஆடுனாரு.. அவரோட விக்கெட்ட எடுத்ததுல ரொம்ப ஹேப்பி – குல்தீப் யாதவ் மகிழ்ச்சி

அவருக்கு அடுத்து 71.43 என்கிற சராசரியில் 1000 ரன்களை தொட்ட வீரராக இரண்டாம் இடத்தில் இருந்த புஜாராவின் சாதனையை தற்போது மிகச்சரியாக 71.43 என்ற புள்ளிகளுடன் ஜெய்ஸ்வாலும் சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement