இந்த சீரிஸ் புல்லா அவர்தான் நல்லா ஆடுனாரு.. அவரோட விக்கெட்ட எடுத்ததுல ரொம்ப ஹேப்பி – குல்தீப் யாதவ் மகிழ்ச்சி

Kuldeep
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக தரம்சாலா நகரில் மார்ச் 7-ஆம் தேதி துவங்கிய ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளிலேயே இந்திய அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. இன்று காலை துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 218 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இங்கிலாந்து அணி சார்பாக துவக்க வீரர் ஜாக் க்ராவ்லி 79 ரன்களையும், ஜானி பேர்ஸ்டோ 29 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

- Advertisement -

அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது முதல்நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 135 ரன்கள் குவித்துள்ளது. அதனைத்தொடர்ந்து 83 ரன்கள் பின்தங்கிய நிலையில் நாளை இரண்டாம் நாள் ஆட்டத்தை விளையாட இருக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ் முதல்நாள் போட்டி முடிந்து பேட்டி ஒன்றினை அளித்திருந்தார். அதில் அவர் கூறியதாவது : நான் என்னுடைய விளையாட்டை மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடி வருகிறேன்.

- Advertisement -

2021-இல் எனக்கு செய்யப்பட்ட ஆபரேஷனுக்கு பிறகு தற்போது கடுமையான உழைப்பிற்கு பிறகு சிறப்பாக பந்துவீசி வருகிறேன். குறிப்பாக என்னுடைய வேகத்தில் நான் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். ஏனெனில் இந்தியாவில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடும்போது பந்துவீச்சில் வேகம் என்பது சரியாக இருக்க வேண்டும். இங்கிலாந்து வீரரான ஜாக் க்ராவ்லியின் விக்கெட்டை வீழ்த்தியதில் மிகவும் மகிழ்ச்சி.

இதையும் படிங்க : 6, 0, 6, 6.. இங்கிலாந்தின் அஸ்வினை நொறுக்கிய ஜெய்ஸ்வால்.. சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து அபார சாதனை

ஏனெனில் இந்த தொடர் முழுவதுமே அவர் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அந்த வகையில் அவரின் விக்கெட்டை வீழ்த்தியதை எண்ணி பெருமை அடைகிறேன். தற்போது எனது பந்துவீச்சில் அதிக வேரியேஷன்களையும், சரியான இடங்களில் பந்துவீசி விக்கெட் வீழ்த்த வேண்டும் என்பதையும் கவனித்து செயல்பட்டு வருகிறேன். அதன் காரணமாக என்னால் விக்கெட்டுகளை எடுக்க முடிகிறது என குல்தீப் யாதவ் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement