6, 0, 6, 6.. இங்கிலாந்தின் அஸ்வினை நொறுக்கிய ஜெய்ஸ்வால்.. சச்சினின் மாபெரும் சாதனையை தகர்த்து அபார சாதனை

Jaiswal vs Bashir
- Advertisement -

மார்ச் 7ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி தரம்சாலா நகரில் துவங்கியது. அதில் ஏற்கனவே 3 – 1* என்ற கணக்கில் இந்தியா இத்தொடரை வென்று விட்டதால் ஆறுதல் வெற்றியை பெறும் முனைப்புடன் களமிறங்கிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸ் வென்று பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் 218 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணிக்கு ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜான் பேர்ஸ்டோ போன்ற முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

- Advertisement -

சச்சினை முந்திய ஜெய்ஸ்வால்:
அதன் பின் களமிறங்கிய இந்தியாவுக்கு ஆரம்பத்திலேயே சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 5 பவுண்டரி 3 சிக்சருடன் 57 (58) ரன்கள் குவித்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் நிதானமாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா அரை சதமடித்து 52* ரன்களும் அடுத்ததாக வந்த சுப்மன் கில் 26* ரன்களும் எடுத்தனர்.

அதனால் முதல் நாள் முடிவில் 135/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட வெறும் 83 ரன்கள் மட்டுமே பின்தங்கியுள்ளது. முன்னதாக இந்த தொடரில் ஆரம்பம் முதலே சொல்லி அடித்து வரும் ஜெய்ஸ்வால் இப்போட்டியில் எடுத்த 57 ரன்களையும் சேர்த்து விராட் கோலியை முந்தி இங்கிலாந்துக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரில் 700 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனை படைத்தார்.

- Advertisement -

மேலும் கடந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்து சவாலை கொடுத்த சோயப் பஷீர் இங்கிலாந்து அணியின் புதிய ரவிச்சந்திரன் அஸ்வின் என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் சமீபத்தில் பாராட்டியிருந்தார். அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் சோயப் பஷீர் 9வது ஓவரின் 3வது பந்தில் இறங்கி சென்று சிக்சரை அடித்த ஜெய்ஸ்வால் 4வது பந்தை தவறவிட்டாலும் 5 மற்றும் 6வது பந்தில் மீண்டும் அடுத்தடுத்த சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படிங்க: இந்தியா 135/1.. கிங் கோலியின் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. கவாஸ்கரின் 45 வருட வாழ்நாள் சாதனையும் சமன்

அந்த வகையில் இங்கிலாந்து அணியின் புதிய அஸ்வினை வெளுத்து வாங்கிய ஜெய்ஸ்வால் இந்த தொடரின் 5 போட்டிகளில் இதுவரை மொத்தம் 26* சிக்ஸர்களை பறக்க விட்டுள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணிக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் வாழ்நாள் சாதனை உடைத்துள்ள ஜெய்ஸ்வால் புதிய வரலாற்று சாதனை படைத்தார். அந்த பட்டியல்:
1. யாசஸ்வி ஜெய்ஸ்வால் : 27*, இங்கிலாந்துக்கு எதிராக
2. சச்சின் டெண்டுல்கர் : 26, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக
3. ரோஹித் சர்மா : 22 தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக
4. கபில் தேவ் : 21, இங்கிலாந்துக்கு எதிராக
5. ரிஷப் பண்ட் : 21, இங்கிலாந்துக்கு எதிராக

Advertisement