ரோஹித்தால் ஜஸ்ட் மிஸ்ஸான உலக சாதனை.. வாசிம் அக்ரமின் 28 வருட சாதனையை சமன் செய்த ஜெய்ஸ்வால்

Jaiswal Wasim Akram
- Advertisement -

இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் முதல் போட்டியில் தோல்வியை பரிசளித்த இங்கிலாந்தை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த இந்தியா மூன்றாவது போட்டியிலும் 434 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அதனால் 2 – 1* (5) என்ற கணக்கில் இத்தொடரில் முன்னிலை வகிக்கும் இந்தியா சொந்த மண்ணில் தங்களை சுலபமாக வீழ்த்த முடியாது என்பதை நிரூபித்தது.

முன்னதாக ராஜ்கோட் நகரில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இளம் இந்திய வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் முதல் இன்னிங்ஸில் 10 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்பத்தில் மெதுவாக விளையாடிய அவர் நேரம் செல்ல செல்ல அதிரடியாக விளையாடி சதமடித்தார். அப்போது தசைப்பிடிப்பு காரணமாக விளையாட முடியாமல் பாதியிலேயே வெளியேறிய அவர் மீண்டும் நான்காவது நாளில் பேட்டிங் செய்ய வந்தார்.

- Advertisement -

தவறிய உலக சாதனை:
ஆனால் அப்போதும் அதிரடி குறையாமல் வெளுத்து வாங்கிய அவர் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி வியப்பில் ஆழ்த்தி இரட்டை சதமடித்து 214* ரன்கள் குவித்தார். ஏற்கனவே விசாகப்பட்டினத்தில் நடந்த இரண்டாவது போட்டியில் 209 ரன்கள் குவித்த அவர் இதையம் சேர்த்து இங்கிலாந்துக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் இரட்டை சதமடித்த முதல் இந்திய வீரராக சாதனை படைத்தார்.

அத்துடன் மொத்தம் 14 பவுண்டரி மற்றும் 12 சிக்சர்கள் அடித்த அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரமின் 28 வருட உலக சாதனையை சமன் செய்தார். இதற்கு முன் கடந்த 1996ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியின் ஒரு இன்னிங்சில் வாசிம் அக்ரமும் அதிகபட்சமாக 12 சிக்சர்கள் அடித்துள்ளார்.

- Advertisement -

சொல்லப்போனால் 430/4 ரன்களில் இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸை கேப்டன் ரோஹித் சர்மா டிக்ளேர் செய்தார். ஒருவேளை அவர் இன்னும் ஓரிரு ஓவர்கள் தாமதமாக டிக்ளேர் செய்திருந்தால் கூட வாசிம் அக்ரமின் அந்த உலக சாதனையை ஜெய்ஸ்வால் உடைத்திருப்பார் என்றே சொல்லலாம். இருப்பினும் அதை நூலிலையில் தவற விட்ட ஜெயஸ்வால் இதுவரை 171, 209, 214* என 3 சதங்கள் அடித்துள்ளார்.

இதையும் படிங்க: எப்போ முடியும்ன்னு காத்திருப்பீங்களா.. கோபமான ரோஹித் சர்மா.. டிக்ளேர் செய்வதில் நிகழ்ந்த காமெடி

இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் மூன்று சதத்தையும் 150க்கும் மேற்பட்ட ரன்களாக மாற்றிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். அந்த வகையில் 22 வயதிலேயே அசத்தும் ஜெய்ஸ்வால் இந்திய அணியின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

Advertisement