எப்போ முடியும்ன்னு காத்திருப்பீங்களா.. கோபமான ரோஹித் சர்மா.. டிக்ளேர் செய்வதில் நிகழ்ந்த காமெடி

Rohit Declartion
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ராஜ்கோட் நகரில் பிப்ரவரி 15ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா ரோகித் சர்மா 132, ஜடேஜா 112 ரன்கள் எடுத்த உதவியுடன் 445 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அதிரடியாக விளையாட முயற்சித்து 319 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அதிகபட்சமாக பென் டக்கெட் 153 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்கள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்தியா 430/4 ரன்கள் குவித்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 214*, கில் 91, சர்பராஸ் கான் 68 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

கோபமான ரோஹித்:
இறுதியில் 557 ரன்கள் துரத்திய இங்கிலாந்து மோசமாக விளையாடி 122 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.  அதிகபட்சமாக மார்க் வுட் 33 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் சாய்ந்தார். முன்னதாக இப்போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 400 ரன்கள் தாண்டியதும் டிக்ளேர் செய்வதற்காக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தயாரானார். அந்த நேரம் பார்த்து 97வது ஓவரின் முடிவில் நடுவர்கள் தண்ணீர் இடைவெளி விட்டனர்.

அதை தொடர்ந்து தேவையான தண்ணீரை குடித்து வியர்வைகளை துடைத்துக்கொண்ட ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் புத்துணர்ச்சியடைந்து மீண்டும் பேட்டிங் செய்ய தயாராகினர். அப்போது நம்முடைய கேப்டனை பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் அவர்கள் இருவரும் பெவிலியனில் இருந்த ரோகித் சர்மாவை பார்த்தனர். அங்கே ரோகித் சர்மா ஃபீல்டிங் செய்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தார்.

- Advertisement -

அதனால் நம்முடைய கேப்டன் டிக்ளேர் செய்து விட்டார் என்று கருதிய ஜெய்ஸ்வால் மற்றும் சர்பராஸ் ஆகியோர் பேட்டை தூக்கிக்கொண்டு பெவிலியன் நோக்கி நடந்தனர். அதை தொடர்ந்து இங்கிலாந்து அணியினரும் இந்தியா டிக்ளேர் செய்து விட்டார்கள் போல என்று நினைத்து நடைய கட்டினார்கள். குறிப்பாக ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஆகிய துவக்க வீரர்கள் பேட்டிங் செய்ய தயாராவதற்காக வேகமாக ஓடினார்கள்.

இதையும் படிங்க: நான் இரட்டை சதமடிக்க அவங்க 2 பேர் தான் காரணம்.. இங்கிலாந்தை துவைத்த ஜெய்ஸ்வால் பேட்டி

ஆனால் அதை பார்த்து கோபமான ரோகித் சர்மா “நான் டிக்ளர் செய்யவே இல்லை. அதற்குள் எப்படா முடியும்ன்னு காத்திருந்தீங்களா? மீண்டும் போய் பேட்டிங் செய்யுங்கள்” என்ற வகையில் இந்திய வீரர்களை திட்டாத குறையாக ரியாக்சன் கொடுத்தார். அதனால் இங்கிலாந்து வீரர்கள் அதிருப்தியடைந்த நிலையில் மைதானத்தில் குழப்பம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் டாம் ஹார்ட்லிக்கு எதிராக சர்பராஸ் கான் 6, 4, 6, 0, 1 ரன்கள் எடுத்த பின் ஒரு வழியாக ரோஹித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement