IND vs WI : தனது அறிமுகப்போட்டியையே அசத்தலாக மாற்ற யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு காத்திருக்கும் – பொன்னான வாய்ப்பு

Yashasvi-Jaiswal
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது நேற்று ஜூலை 12-ஆம் தேதி டோமினிக்கா நகரில் துவங்கியது. இந்த தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணியானது முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 150 ரன்களுக்கு சுருண்டது.

Ashwin

- Advertisement -

இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதனை தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடி வரும் இந்திய அணியானது நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ரன்கள் எடுத்துள்ளது.

இன்னும் 70 ரன்கள் பின்தங்கிய நிலையில் நான்கு நாட்கள் ஆட்டம் மீதமுள்ளதால் இந்திய அணியில் வெற்றி வாய்ப்பு தற்போதே பிரகாசம் பெற்றுள்ளது என்று கூறலாம். அதோடு இந்திய அணியின் துவக்க வீரராக அறிமுகமாகிய யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அறிமுக போட்டியிலே சாதனை படைக்க ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. அதனை அவர் சரியாக பூர்த்தி செய்வாரா என்பது அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

Jaiswal

அந்த வகையில் ஏற்கனவே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியிலேயே சதம் அடித்த இடது கை ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் கங்குலி ஆகியோர் இருந்து வரும் வேளையில் அவர்களுக்கு அடுத்து தற்போது முதல் போட்டியிலேயே சதம் அடிக்கும் அருமையான வாய்ப்பு யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கும் இருக்கிறது.

- Advertisement -

நேற்றைய போட்டியில் 73 பந்துகளை சந்தித்த அவர் 6 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் குவித்து அசத்தினார். ஒருபுறம் ரோகித் சர்மா 30 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கும் வேளையில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் எவ்வித பதற்றமும் இன்றி மிகச் சிறப்பாக விளையாடிய வருவதால் நிச்சயம் இந்த இன்றைய போட்டி ஆரம்பித்த சில மணி நேரத்திலேயே அவர் அரைசதம் கடப்பார்.

இதையும் படிங்க : என்னுடைய கேரியரில் அவங்களுக்கு எதிரா பந்து வீச ரொம்ப கஷ்டப்பட்டேன் – 4 ஜாம்பவான்களை பெயரிட்ட அனில் கும்ப்ளே

அதன் பின்னர் சரியான ஆட்டத்தை கையாண்டு சதம் அடித்தால் நிச்சயம் அவராலும் அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இடதுகை வீரர் என்ற சாதனையை செய்ய முடியும். அதோடு ஏற்கனவே ரோகித் சர்மா துவக்க ஆட்டக்காரர்களாக வலது கை, இடது கை வீரர்கள் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று கூறியிருந்த வேளையில் முதல் போட்டியிலேயே ஜெய்ஸ்வால் சதம் அடித்தால் அவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement