என்னுடைய கேரியரில் அவங்களுக்கு எதிரா பந்து வீச ரொம்ப கஷ்டப்பட்டேன் – 4 ஜாம்பவான்களை பெயரிட்ட அனில் கும்ப்ளே

Kumble
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே சர்வதேச கிரிக்கெட்டில் அதிக விக்கெட்களை எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த பெருமைக்குரியவர். குறிப்பாக இன்ஜினியரிங் படிப்பை முடித்து கிரிக்கெட்டின் மீதான காதலால் கடந்த 1990ஆம் ஆண்டு தம்முடைய 18 வயதில் சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகி ஆரம்ப காலங்களில் தடுமாறியதால் உயரமாக இருக்கும் உங்களால் ஸ்பின்னராக சாதிக்க முடியாது என்று விமர்சனங்கள் அவர் மீது எழுந்தன. இருப்பினும் அவற்றையெல்லாம் தம்முடைய திறமைகளால் தகர்த்த அவர் வருடங்கள் செல்ல செல்ல அனுபவத்தால் பாடங்களை கற்று மிகச் சிறப்பாக செயல்பட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் 132 போட்டிகளில் 619 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

kumble 1

- Advertisement -

அதிலும் தலைநகர் டெல்லியில் 1999இல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை சாய்த்த அவர் மிகப்பெரிய சரித்திர உலக சாதனை படைத்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். குறிப்பாக முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோரை போல் பெரிய அளவில் பந்தை சுழற்றவில்லை என்றாலும் லேசான சுழலுடன் பந்து வீசும் வேகத்தில் மாற்றங்களை செய்து எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடித்த அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் 271 போட்டியில் 337 விக்கெட்களை சாய்த்து இந்தியாவின் மேட்ச் வின்னராக நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார்.

சாவலான பேட்ஸ்மேன்கள்:
மேலும் 2017இல் இந்தியாவின் பயிற்சி செயலராக இருந்தும் ஓய்வு பெற்ற அவர் வார்னே போலவே உலகின் பல தரமான டாப் பேட்ஸ்மேன்களுக்கு சவாலை கொடுத்த வரலாற்றின் மிகச்சிறந்த ஸ்பின்னராகவே போற்றப்படுகிறார். இருப்பினும் எவ்வளவு பெரிய ஜாம்பவானாக இருந்தாலும் அவர்களுக்கும் இந்த உலகில் சிலர் சவாலை கொடுத்துள்ளார்கள்.

lara

அந்த வகையில் தம்முடைய கேரியரில் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரைன் லாரா, பாகிஸ்தானின் இன்சமாம், தென் ஆப்பிரிக்காவின் மகத்தான ஆல் ரவுண்டர் ஜாக் கேலிஸ் மற்றும் இலங்கையின் நாயகன் அரவிந்த் டீ சிவா ஆகியோர் தமக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்த பேட்ஸ்மேன்கள் என்று அனில் கும்ப்ளே பாராட்டியுள்ளார். இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “உண்மையை சொல்ல வேண்டுமெனில் அது போன்ற பேட்ஸ்மேன்களில் பாதி பேர் என்னுடைய அணியிலேயே இருந்தனர். அதாவது சச்சின், கங்குலி, டிராவிட், சேவாக், லக்ஷ்மண் ஆகியோருக்கு எதிராக பந்து வீசுவதாக நினைத்து பாருங்கள்”

- Advertisement -

“அது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இருப்பினும் இந்த கலகலப்பையும் தாண்டி நானும் சில சவாலை கொடுத்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசியுள்ளேன். அதில் அரவிந்தா டீ சில்வா மற்றும் பிரைன் லாரா ஆகியோர் மிகவும் கடினமானவர்கள். குறிப்பாக பிரைன் லாரா ஒவ்வொரு பந்திலும் 3 வெவ்வேறு விதமான ஷாட்டுகளை அடிக்கும் திறமையை வைத்திருப்பார். அதனால் எளிதில் அவரை எளிதில் அவுட்டாக்கி விடலாம் என்று நீங்கள் நினைக்க முடியாது”

kumbley

“குறிப்பாக நீங்கள் அவரை ஏமாற்றி விட்டீர்கள் என்று கருதுவீர்கள். ஆனால் அவர் திடீரென கற்பனை செய்ய முடியாத ஒரு ஷாட்டை அடிப்பார். மேலும் அவரை முன்னோக்கி அடிக்க வைத்து நீங்கள் ஏமாற்றலாம் என்று நினைக்கலாம். ஆனால் அவர் அடுத்த பந்தில் காத்திருந்து பின்னோக்கிச் சென்று லேட் கட் ஷாட் வாயிலாக உங்களை பவுண்டரியாக பறக்க விடுவார். அது தான் அவருடைய தரமாகும். அது போக ஒவ்வொரு தொடரிலும் நீங்கள் எதிரணியில் இருக்கும் சில தரமான வீரர்களிடம் கடினத்தை சந்திப்பீர்கள்”

இதையும் படிங்க:TNPL 2023 : சாய் சுதர்சனையே மிஞ்சி சாதனை படைத்த மற்றொரு தமிழக வீரர் – அதிக ரன்கள் குவித்த டாப் 5 வீரர்கள் லிஸ்ட் இதோ

“அந்த வகையில் ஜேக் காலிஸ் எப்போதுமே தன்னுடைய விக்கெட்டை சுலபமாக கொடுக்க மாட்டார். இன்சாமும் அதே வகையைச் சேர்ந்தவர். அதே போல சில இடது கை வீரர்களும் பெரிய சவாலை கொடுப்பார்கள். குறிப்பாக மேத்தியூ ஹெய்டன் அதிரடியாக உங்களை எதிர்கொள்வார். அதனால் அவரை எல்பிடபுள்யூ முறையில் முறையில் அவுட் செய்வது என்பது சாத்தியமற்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள்” என கூறினார்.

Advertisement