விராட் கோலியை பற்றிய கேள்விக்கு.. கையை உயர்த்தி செய்தியாளரை கலாய்த்த ரோஹித்.. 2 ஸ்வாரஸ்யமான பதில்

Rohit Sharma 5
- Advertisement -

ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் வெளியானது. ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ள 15 பேர் கொண்ட அந்த அணியில் நடராஜன் போன்ற தமிழக வீரர் யாருமே தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. அதே போல ரிங்கு சிங் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் மட்டுமே இடம் பிடித்தது பல முன்னாள் வீரர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதே போல ஒரேடியாக சஹால், குல்தீப் யாதவ், ஜடேஜா மற்றும் அக்சர் படேல் ஆகிய 4 ஸ்பின்னர்கள் தேர்வு செய்யப்பட்டது ஏன் என்றும் கேள்விகள் காணப்படுகிறது. மற்றபடி விராட் கோலி, சூரியகுமார் யாதவ், பும்ரா, ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற அனுபவமும் இளமையும் கலந்த வீரர்கள் இந்தியாவுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

- Advertisement -

கலாய்த்த ரோஹித்:
முன்னதாக டி20 கிரிக்கெட்டில் சற்று குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலி இந்த உலகக் கோப்பையில் தேர்வு செய்யக்கூடாது என்ற விமர்சனங்கள் காணப்பட்டது. இருப்பினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ள விராட் கோலி 2022 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக தனி ஒருவனாக இந்தியாவுக்கு மகத்தான வெற்றி பெற்று கொடுத்தார்.

எனவே அந்த அனுபவத்துக்கு மதிப்பளித்துள்ள தேர்வுக் குழு மீண்டும் விராட் கோலியை தேர்ந்தெடுத்துள்ளது. இந்நிலையில் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடும் விராட் கோலியை தேர்வு செய்தது ஏன்? என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கேப்டன் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது எதுவுமே பேசாத ரோகித் சர்மா வாய் மீது கை வைத்துக் கொண்டு சிரித்து அந்த செய்தியாளரை கலாய்த்தார்.

- Advertisement -

குறிப்பாக விராட் கோலி போன்ற மகத்தான வீரரின் தரத்தை புரியாமல் கிரிக்கெட்டைப் பற்றி தெரியாமல் இப்படி கேள்வி கேட்கலாமா? என்ற வகையில் அந்த செய்தியாளரை ரோஹித் சர்மா மறைமுகமாக கலாய்த்தார். அத்துடன் தற்போதைய இந்திய அணியில் ஆஃப் ஸ்பின்னர் யாருமே இல்லையே? என்று மற்றொரு செய்தியாளர் கேட்டார். அதற்கு நான் இருக்கிறேன் என்று ஜாலியாக கையை தூக்கிக் காண்பித்த ரோஹித் சர்மா அது பற்றி பதிலளித்தது பின்வருமாறு.

இதையும் படிங்க: அது கொஞ்சம் குறைஞ்சுடுச்சு.. இல்லனா ஹைதெராபாத்தை ஃபினிஷ் பண்ணிருப்பேன்.. 1 ரன் தோல்வியால் ரியன் பராக் வருத்தம்

“துரதிஷ்டவசமாக வாஷிங்டன் சுந்தர் சமீப காலங்களில் பெரிய வாய்ப்புகள் பெறவில்லை. எனவே அஸ்வின் மற்றும் அக்சர் ஆகியோரிடையே போட்டி ஏற்பட்டது. அந்த சூழ்நிலையில் 2 இடது கை ஸ்பின்னர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம். அஸ்வின் நீண்ட காலமாக டி20 கிரிக்கெட்டில் விளையாடவில்லை. 2023 உலகக் கோப்பைக்கு பின் நடைபெற்ற ஆஸ்திரேலிய டி20 தொடரில் அக்சர் நன்றாக விளையாடினார். அத்துடன் மிடில் ஆர்டரில் இடது கை பேட்ஸ்மேன் வாய்ப்பை கொடுக்கும் என்பதால் அவரை தேர்வு செய்தோம்” என்று கூறினார்.

Advertisement