இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பத்திலிருந்தே ஏகப்பட்ட சாதனைகள் இந்த தொடரின் மூலம் அரங்கேறி வரும் நிலையில் மேலும் ஒரு அசத்தலான சாதனை இந்திய வீரர் சார்பாக நிகழ்த்தப்பட்ட இருப்பது தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் இந்திய அணியின் இளம் துவக்க வீரரான 22 வயதான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் கடந்த ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 13 இன்னிங்ஸ்களில் 861 ரன்களை குறித்துள்ளார். இதில் மூன்று சதங்களும், இரண்டு அரைசதங்களும் அடங்கும்.
அதோடு இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் அடுத்தடுத்து அவர் இரட்டை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் அவர் படைக்க இருக்கும் சாதனை யாதெனில் :
இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த போட்டிகளில் 1000 ரன்களை எடுத்த வீரர் என்ற படியலில் டான் பிராட்மேன் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தை பிடிக்க தற்போது யாஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு அருமையான வாய்ப்பு உள்ளது.
இந்த நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் 139 ரன்களை குவிக்கும் பட்சத்தில் இந்திய அளவில் மிக குறைந்த இன்னிங்ஸ்களிலேயே 1000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையும், டான் பிராட்மேனுக்கு அடுத்து விரைவாக 1000 ரன்களை சர்வதேச கிரிக்கெட்டில் பூர்த்தி செய்த வீரராகவும் அவர் சாதனை படைப்பார். இந்திய அளவில் வினோத் காம்பிளி தனது 12-வது போட்டியில் 14 இன்னிங்ஸ்சில் விளையாடி இருந்த போது இந்த மைல் கல்லை எட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : முதல்நாள் போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு ரோஹித் சர்மா அளித்த மரியாதை.. ரசிகர்கள் பாராட்டு – விவரம் இதோ
ஏற்கனவே இந்த டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகளில் அடுத்தடுத்து இரட்டை சதமடித்துள்ள ஜெய்ஸ்வால் நிச்சயம் இந்த போட்டியிலும் முதல் இன்னிங்சில் சதம் அடிக்கும் பட்சத்தில் அதை பெரிய சதமாக மாற்றுவார் என்பதில் சந்தேகம் இல்லை. அதோடு இந்த தொடரின் முதல் மூன்று போட்டிகளில் இதுவரை அவர் 545 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.