முதல்நாள் போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு ரோஹித் சர்மா அளித்த மரியாதை.. ரசிகர்கள் பாராட்டு – விவரம் இதோ

Akash-Deep
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் முதல் நாள் ஆட்டநேர முடிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் சதமடித்து அசத்தினார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியின் போது இங்கிலாந்து அணியின் முதல் மூன்று வீரர்களை இந்திய அணியின் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப் உணவு இடைவேளைக்கு முன்னரே வீழ்த்தி அசத்தினார்.

இதன் காரணமாக ரோகித் சர்மா அவரது இந்த சிறப்பான செயல்பாட்டை பாராட்டும் விதமாக செய்த செயல் தற்போது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் முதல் போட்டியிலேயே சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்களை வீழ்த்திய அவரை உணவு இடைவேளையின் போது இந்திய அணி வெளியேறுகையில் அவரை முன்னால் நடக்க சொல்லி அதன் பின்னர் மற்ற வீரர்களை செல்லுமாறு கேப்டன் ரோஹித் சர்மா கேட்டுக்கொண்டார்.

- Advertisement -

அந்தவகையில் உணவு இடைவேளையின் போது இந்திய அணி வெளியேறுகையில் ஆகாஷ் தீப் முதல் நபராக முன்னே செல்ல அவரை பின்தொடர்ந்து இந்திய வீரர்கள் பெவிலியனுக்கு திரும்பினர். அதன் மூலம் அவரின் செயல்பாட்டுக்கான பாராட்டை மரியாதையும் இந்திய அணி வழங்கியது.

இதையும் படிங்க : சிவம் துபேவை தொடர்ந்து மேலும் 2 சி.எஸ்.கே அணியின் ஸ்டார் வீரர்களுக்கு காயம் – மிகப்பெரிய பின்னடைவு

இப்படி அறிமுக வீரரான ஆகாஷ் தீப்பின் செயல்பாட்டை பாராட்டும் விதமாக ரோஹித் சர்மா செய்த செயல் ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. பும்ராவிற்கு மாற்று வீரராக அணியில் இடம்பிடித்த ஆகாஷ் தீப் முதல் போட்டியிலேயே அனைவரது மத்தியிலும் தனது சிறப்பான செயல்பாடுகள் மூலம் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement