சிவம் துபேவை தொடர்ந்து மேலும் 2 சி.எஸ்.கே அணியின் ஸ்டார் வீரர்களுக்கு காயம் – மிகப்பெரிய பின்னடைவு

CSK
- Advertisement -

இந்தியாவில் கடந்து 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 16 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் அடுத்ததாக எதிர்வரும் 17-வது சீசனானது அடுத்த மாதம் மார்ச் 22-ஆம் தேதி துவங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத இருக்கின்றன.

இந்த தொடரானது சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு கடைசி சீசனாக இருக்கும் என்பதனால் இந்த தொடரினை வெற்றியுடன் முடிக்க வேண்டும் என சென்னை அணியின் வீரர்கள் உத்வேகமாக தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரரான ஷிவம் தூபே காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன. ரஞ்சி போட்டிகளில் விளையாடும் போது அவருக்கு ஏற்பட்ட இந்த காயம் குணமடைய சில மாதங்கள் ஆகும் என்பதனால் அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பாரா? என்பது சந்தேகமாகி உள்ளது.

இந்நிலையில் ஷிவம் தூபேவை தொடர்ந்து மேலும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தற்போது நியூசிலாந்து மண்ணில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடி வந்த சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரர்களான டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் காயமடைந்துள்ளது சிஎஸ்கே அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது அசத்தலாக செயல்பட்ட டேவான் கான்வே மற்றும் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இரண்டாவது போட்டியின் போது காயமடைந்துள்ளனர். குறிப்பாக ரச்சின் ரவீந்திரா காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் விளையாடவில்லை.

இதையும் படிங்க : அவருக்கு தெரியாம அனுப்புனேன்.. வீணாகிடுவான்னு சொன்னாங்க.. படிக்காததால் எல்லாம் மாறிடுச்சு.. ஆகாஷ் தீப் அம்மா பேட்டி

அனால் அந்த போட்டியில் விளையாடியிருந்த கான்வே காயம் காரணமாக பேட்டிங் செய்ய களமிறங்கவில்லை. ஐபிஎஸ் தொடருக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியிருக்கும் வேளையில் அவர்கள் இருவருமே காயமடைந்துள்ளதால் எதிர்வரும் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பார்களா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement