அவருக்கு தெரியாம அனுப்புனேன்.. வீணாகிடுவான்னு சொன்னாங்க.. படிக்காததால் எல்லாம் மாறிடுச்சு.. ஆகாஷ் தீப் அம்மா பேட்டி

Akash Deep 4
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சி நகரில் துவங்கியுள்ளது. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து முதல் நாள் முடிவில் 302/7 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 106* ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். முன்னதாக இந்த போட்டியில் ஓய்வெடுக்கும் பும்புராவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் அறிமுகமாக களமிறங்கும் வாய்ப்பை பெற்றார். அதில் ஆரம்பத்திலேயே நோபால் போட்டு விக்கெட்டை பறிகொடுத்த அவர் அதற்காக அசராமல் அடுத்த சில ஓவர்களில் பென் டக்கெட், ஓலி போப் ஆகிய 2 பேட்ஸ்மேன்களை ஒரே ஓவரில் அவுட்டாக்கி கம்பேக் கொடுத்தார்.

- Advertisement -

படிக்காமலும் வெற்றி:
அத்துடன் 42 ரன்கள் அடித்து சவாலை கொடுத்த ஜாக் கிராவ்லியையும் கிளீன் போல்ட்டாக்கிய அவர் மொத்தம் 3* விக்கெட்களை எடுத்து இப்போட்டியில் இந்தியாவுக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தார். முன்னதாக இந்த போட்டியில் தன்னுடைய அறிமுக தொப்பியை ஜாம்பவான் ராகுல் டிராவிட் கையால் வாங்கிய ஆகாஷ் தீப் நேரடியாக தம்முடைய அம்மாவிடம் சென்று காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கி சிறப்பாக பந்து வீசி வருகிறார்.

இந்நிலையில் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று அப்பா வற்புறுத்தியபோதும் அவருக்கு தெரியாமல் தன்னுடைய மகன் கிரிக்கெட்டில் விளையாட உதவியதாக ஆகாஷ் தீப் அம்மா லடுமா தேவி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆகாஷ் தீப் அப்பா அவர் கவர்மெண்ட் ஆஃபீஸராக வருவதற்கு விரும்பினார். ஆனால் கிரிக்கெட்டில் தான் அவர் ஆர்வமாக இருந்தார். அவருக்கு நான் உதவி செய்தேன்”

- Advertisement -

“குறிப்பாக அப்பாவுக்கு தெரியாமல் ரகசியமாக கிரிக்கெட்டில் விளையாட உதவிய நான் அவரின் கனவு பூர்த்தியாக முடிந்த உதவிகளை செய்தேன். அந்த சமயத்தில் உங்களுடைய மகன் கிரிக்கெட்டில் விளையாடி தன்னுடைய வாழ்க்கையை வீணடித்துக் கொள்ளப் போகிறார் என்று பலரும் சொன்னார்கள். ஆனால் நாங்கள் அவர் மீது நம்பிக்கை வைத்தோம். 6 மாத இடைவெளியில் ஆகாஷ் தீப் தன்னுடைய அப்பா மற்றும் சகோதரரை இழந்தும் கிரிக்கெட்டில் விளையாடுவதை விடவில்லை”

இதையும் படிங்க: 183 ரன்ஸ்.. புஜாராவை மடக்கிய தமிழக வீரர்.. சாய் கிசோர் மேஜிக்.. கோவையில் அசத்தும் தமிழ்நாடு

“ஒருவேளை அவருடைய அப்பா இருந்திருந்தால் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார். தற்போது இந்த பூமியில் நான் மிகவும் பெருமை மிகுந்த அம்மாவாக இருக்கிறேன். பொதுவாக நன்றாக படிக்கும் குழந்தைகள் தான் அரசர்களாக வருவார்கள் மற்றவர்கள் வீணாய் போவார்கள் என்று பலரும் சொல்வார்கள். ஆனால் எங்கள் விஷயத்தில் அது நேர்மாறாக நடந்துள்ளது” என்று கூறியுள்ளார்.

Advertisement