இந்தியாவுக்கு மீண்டும் கைகொடுக்கும் ஜெய்ஸ்வால்.. கங்குலியின் 17 வருட சாதனையை உடைத்து தனித்துவமான சாதனை

jaiswal 54
- Advertisement -

ராஞ்சி நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் நான்காவது டெஸ்ட் போட்டியில் மோதி வருகின்றன. பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 353 ரன்கள் குவித்தது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்ததால் 112/5 என தடுமாறிய அந்த அணி 300 ரன்கள் கூட தாண்டாது என்று ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 3வது இடத்தில் நங்கூரமாக பேட்டிங் செய்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் தன்னுடைய மொத்த அனுபவத்தையும் காட்டி இந்தியாவுக்கு எதிராக அதிக சதங்கள் அடித்த வீரராக உலக சாதனை படைத்து 122* ரன்கள் குவித்து இங்கிலாந்தை காப்பாற்றினார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, ஆகாஷ் தீப 3, முகமது சிராஜ் 2 விக்கெட்கள் எடுத்தனர்.

- Advertisement -

கைகொடுக்கும் ஜெய்ஸ்வால்:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே ஜேம்ஸ் ஆண்டர்சன் வேகத்தில் வெறும் 2 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் வழக்கம் போல இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த நிலையில் அடுத்ததாக வந்த சுப்மன் கில் நிதானமாக விளையாடினார்.

அந்த வகையில் அவசரமின்றி சரிவை சரி செய்வதற்காக நிதானமாக விளையாடிய இந்த ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது நன்கு செட்டிலான சுப்மன் கில் 38 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதமடித்து இந்தியாவுக்கு கை கொடுத்த நிலையில் எதிர்ப்புறம் வந்த ரஜத் படிடார் 17 ரன்களில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

இந்த தொடரில் அறிமுகமாகி இதுவரை அரைசதம் கூட அடிக்காமல் தடுமாறி வந்த அவர் இப்போட்டியில் மீண்டும் சொதப்பி இந்தியாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தினார். அதற்கடுத்ததாக வந்த ரவீந்திர ஜடேஜா அதிரடியாக 2 சிக்சரை பறக்க விட்டாலும் சோயப் பஷீர் சுழலில் 12 (12) ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினார். அப்போது வந்த இரண்டாவது நாள் தேநீர் இடைவெளியில் 131/2 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட 222 ரன்கள் என் தங்கியுள்ளது களத்தில் ஜெயஸ்வால் 54*, சர்பராஸ் கான் 1* ரன்களுடன் உள்ளனர்.

இதையும் படிங்க: சர்பராஸ் கானுக்கு ஹிந்தியில் பதிலளித்த இங்கிலாந்து வீரர்.. இரண்டாம் நாளில் நடைபெற்ற – சுவாரசிய சம்பவம்

மேலும் இந்த தொடரில் இதுவரை ஜெய்ஸ்வால் 599* ரன்கள் எடுத்துள்ளார். இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் அதிக ரன்கள் அடித்த இந்திய இடது கை பேட்ஸ்மேன் என்ற சௌரவ் கங்குலியின் 17 வருட சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால் புதிய தனித்துவமான சாதனையை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. யசஸ்வி ஜெய்ஸ்வால் : 599*, இங்கிலாந்துக்கு எதிராக, 2024*
2. சௌரவ் கங்குலி : 534, பாகிஸ்தானுக்கு எதிராக, 2007
3. கௌதம் கம்பீர் : 463, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2008

Advertisement