சர்பராஸ் கானுக்கு ஹிந்தியில் பதிலளித்த இங்கிலாந்து வீரர்.. இரண்டாம் நாளில் நடைபெற்ற – சுவாரசிய சம்பவம்

Bashir
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது தற்போது ராஞ்சி நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று பிப்ரவரி 23-ஆம் தேதி துவங்கிய இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

நேற்றைய ஆட்டநேர முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 302 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து அணியானது இன்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடி தங்களது இன்னிங்ஸை 353 ரன்களுக்கு முடித்துக்கொண்டது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக இறுதிவரை ஆட்டம் இழக்காமல் மிகச்சிறப்பாக விளையாடிய அந்த அணியின் நட்சத்திர வீரரான ஜோ ரூட் 122 ரன்களை சேர்த்து அசத்தினார். இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

இந்நிலையில் இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது இங்கிலாந்து வீரர் ராபின்சன் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த பின்னர் சோயிப் பஷீர் பேட்டிங் செய்ய வந்தார். அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம் தற்போது இணையத்தில் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் சோயிப் பஷீர் பேட்டிங் செய்யும் போது ஷார்ட் லெக் திசையில் பீல்டிங் செய்து கொண்டிருந்த சர்பராஸ் கான் அவரை ஸ்லெட்ஜிங் செய்ய முயன்றார். பொதுவாகவே இந்திய அணியின் வீரர்கள் எதிரணியை ஹிந்தியில் ஸ்லெட்ஜிங் செய்வது வழக்கம். அந்த வகையில் சர்பராஸ் கான் இங்கிலாந்து வீரரான சோயிப் பஷீரை பார்த்து இவருக்கு பேட்டிங் செய்ய வரும். ஆனால் இந்தி தெரியாது போல என்று கூறினார்.

இதையும் படிங்க : சும்மா உருட்டாதீங்க.. இந்த பையன் 20 வருஷத்துக்கு அப்படித் தான் விளையாடுவான்.. இங்கிலாந்துக்கு கிறிஸ் கெயில் பதிலடி

அதனை கவனித்த சோயிப் பஷீர் எனக்கு கொஞ்சம் ஹிந்தி தெரியும் என்று பதில் அளித்தார். அவர்கள் இருவரது உரையாடல் ஸ்டம்ப் மைக் மூலம் வெளியாகி உள்ளது. சோயிப் பஷீர் இங்கிலாந்து வீரராக இருந்தாலும் பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்டவர் என்பதனால் அவருக்கு ஹிந்தி தெரிவதில் ஆச்சரியம் கிடையாது. அதே போன்று அவர் பாகிஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த குடும்பத்தினர் என்பதனால் அவருக்கு இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்த போது விசா சிக்கலும் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement