சும்மா உருட்டாதீங்க.. இந்த பையன் 20 வருஷத்துக்கு அப்படித் தான் விளையாடுவான்.. இங்கிலாந்துக்கு கிறிஸ் கெயில் பதிலடி

Chris Gayle
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதி வரும் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அதில் முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்ற இங்கிலாந்தை அதற்கடுத்த 2 போட்டிகளில் முறையே 106, 434 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா தக்க பதிலடி கொடுத்து 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

முன்னதாக இந்த தொடரில் விராட் கோலி, கேஎல் ராகுல் போன்ற முக்கிய பேட்ஸ்மேன்கள் இல்லாத குறையைப் போக்கும் அளவுக்கு ஜெய்ஸ்வால், சர்பராஸ் கான் போன்ற இளம் வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக 22 வயதாகும் இளம் வீரர் ஜெய்ஸ்வால் முதல் மூன்று போட்டிகளில் 545* ரன்கள் குவித்து இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து வருகிறார்.

- Advertisement -

கெயில் பதிலடி:
அதிலும் குறிப்பாக இரண்டாவது போட்டியில் 209 ரன்கள் அடித்த அவர் மூன்றாவது போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு எதிராக ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தது உட்பட 12 சிக்சருடன் 214* ரன்கள் குவித்தார். அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடும் தங்களுடைய பஸ்பால் அணுகுமுறையை பார்த்து தான் ஜெய்ஸ்வால் இப்படி அதிரடியாக விளையாடுவதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அப்பட்டமாக பேசினார்.

அதற்கு ஏற்கனவே நாசர் ஹுசைன், மைக்கேல் கிளார்க் போன்ற முன்னாள் வீரர்கள் கடுமையான பதிலடி கொடுத்தனர். அந்த வரிசையில் இணைந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் கிறிஸ் கெயில் வரலாற்றில் விவ் ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா போன்ற பலரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளதாக இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் ஜெய்ஸ்வாலும் அடுத்த 20 வருடத்திற்கு அதிரடியாக விளையாடும் திறமையை கொண்டுள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கிறிஸ் கெயில் விளையாடுவதற்கு முன்பாகவே பல வருடங்களாக சர்வதேச அரங்கில் பலரும் அட்டாக் செய்யும் கிரிக்கெட்டை விளையாடியுள்ளனர். எங்களிடம் விவ் ரிச்சர்ட்ஸ் போன்றவர்கள் எங்களிடமிருந்தனர். பிரைன் லாரா போன்றவர்கள் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அட்டாக் செய்து விளையாடினர். எனவே ஜெய்ஸ்வால் இங்கிலாந்திடமிருந்து எதையும் கற்றுக் கொண்டார் என்று நான் நினைக்கவில்லை”

இதையும் படிங்க: அப்போ ஃபார்முக்கு வந்தது பொய்யா? இங்கிலாந்துக்கு எதிராக ரோகித் பரிதாபம்.. இந்தியாவை காப்பாற்றுவாரா ஜெய்ஸ்வால்

“அப்படி விளையாடுவதை அவர் தன்னுடைய பயிற்சியாளர் ஜவலா சிங்கை பார்த்து கற்றிருக்கலாம். தற்போது அபாரமாக விளையாடும் ஜெய்ஸ்வால் 20 வருடங்களுக்கு விளையாடுவது போல் நம்ப முடியாததாக பேட்டிங் செய்கிறார். அவர் தொடர்ந்து அசத்துவார் என்று நம்புகிறேன். அவர் மீது நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கிறது. அவர் அட்டாக் செய்து விளையாடுவதை நீங்கள் டி20 கிரிக்கெட்டில் பார்க்க முடியும். அது அவருடைய இயற்கையான ஆட்டமாகும். எனவே யாரும் அதை மாற்ற முயற்சிக்க வேண்டாம்” என்று கூறினார்.

Advertisement