அப்போ ஃபார்முக்கு வந்தது பொய்யா? இங்கிலாந்துக்கு எதிராக ரோகித் பரிதாபம்.. இந்தியாவை காப்பாற்றுவாரா ஜெய்ஸ்வால்

- Advertisement -

ராஞ்சி நகரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக துவங்கியுள்ளது. ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. எனவே தொடரை வெல்ல இந்த போட்டியில் செய்யும் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கிய இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி முதல் இன்னிங்ஸில் போராடி 353 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு ஜாக் கிராவ்லி 42, பென் டக்கெட் 11, ஓலி போப் 0, ஜானி பேர்ஸ்டோ 28, கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 3 என முக்கிய வீரர்கள் ஆரம்பத்திலேயே இந்தியாவில் தரமான பந்து வீச்சில் குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 112/5 என தடுமாறிய இங்கிலாந்து 300 ரன்கள் தாண்டாது என்று நம்பப்பட்டது.

- Advertisement -

ஏமாற்றிய ரோஹித்:
ஆனால் அப்போது நிதானமாக விளையாடிய நட்சத்திர வீரர் ஜோ ரூட் தன்னுடைய அனுபவத்தை காண்பித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்து 122* ரன்கள் குவித்து இங்கிலாந்தை காப்பாற்றினார். அவருடன் 6வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பென் ஃபோக்ஸ் 47* ரன்களும் 8வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பாரினர்ஷிப் அமைத்த ஓலி ராபின்சன் 58 ரன்களும் அடித்து இந்தியாவுக்கு தொல்லையை கொடுத்தனர்.

அந்த வகையில் நன்றாக துவங்கினாலும் 300 ரன்களுக்குள் இங்கிலாந்தை ஆல் அவுட் செய்யும் வாய்ப்பை கோட்டை விட்ட இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4, ஆகாஷ் தீப் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து களம்பிறகிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே 2 ரன்களில் ஜேம்ஸ் ஆண்டரசன் வேகத்தில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக முதல் 2 போட்டிகளில் சுமாராக விளையாடி அரை சதம் கூட அடிக்காமல் பின்னடைவை ஏற்படுத்திய அவர் ராஜ்கோட்டில் நடந்த கடந்த 131 ரன்கள் அடித்ததால் ஃபார்முக்கு திரும்பி விட்டார் என்று ரசிகர்கள் நம்பினர். ஆனால் வெறும் 2 ரன்னில் அவுட்டாகி மீண்டும் ஏமாற்றத்தை கொடுத்த ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய குறைந்தபட்ச ஒற்றை இலக்க ஸ்கோரை பதிவு செய்து பரிதாபமாக பெவிலியன் திரும்பினார்.

இதையும் படிங்க: ஒரே போட்டி 3 முக்கிய சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – என்னென்ன சாதனைகள் தெரியுமா?

இருப்பினும் மறுபுறம் வழக்கம் போல இளம் வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடி ஜாம்பவான் ஆண்டர்சனுக்கு எதிராக அடுத்தடுத்த பவுண்டரிகளை அடித்து ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளார். அதனால் இரண்டாவது நாள் உணவு இடைவெளியில் 34/1 ரன்கள் எடுத்துள்ள இந்தியா இன்னும் இங்கிலாந்தை விட 319 ரன்கள் பின்தங்கியுள்ளது. களத்தில் ஜெய்ஸ்வால் 27*, கில் 4* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement