ஒரே போட்டி 3 முக்கிய சாதனைகளை படைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா – என்னென்ன சாதனைகள் தெரியுமா?

Rohit
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் மூன்று சாதனைகளை நிகழ்த்தும் வாய்ப்பு அவரின் கைகளில் காத்திருக்கிறது. அதனை இந்த போட்டியிலேயே நிச்சயம் எட்டவும் அருமையான வாய்ப்பு காத்திருக்கிறது. அந்த வகையில் தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த அந்த அணி தங்களது முதல் இன்னிங்சில் 353 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

அதனைத்தொடர்ந்து தற்போது இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த போட்டியின் போது ரோஹித் சர்மா படைக்கவிருக்கும் சாதனைகள் யாதெனில் :

- Advertisement -

இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை விளாசியுள்ள வீரர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ரோஹித் சர்மா 593 சிக்ஸர்களை அடித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் அவர் 7 சிக்ஸர்களை அடித்தால் 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற மைல்கல்லை எட்டுவார்.

சர்வதேச கிரிக்கெட்டில் 600 சிக்ஸர்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா இதுவரை ஒருநாள் கிரிக்கெட்டில் 323 சிக்ஸர்களையும், டி20 கிரிக்கெட்டில் 190 சிக்ஸர்களையும், டெஸ்ட் கிரிக்கெட்டில் 80 சிக்ஸர்களையும் அடித்துள்ளார். அதேபோன்று சர்வதேச டி20 போட்டிகளிலும் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் என்ற படியலிலும் ரோகித் சர்மா முதலிடத்தில் உள்ளார்.

- Advertisement -

மேலும் இந்த டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின் போது ரோஹித் சர்மா சதம் அடித்து பார்மிற்கு திரும்பியுள்ள வேளையில் இதுவரை அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3973 ரன்களை அடித்துள்ளார். இந்நிலையில் இந்த நான்காவது போட்டியின் முதல் இன்னிங்சில் அவர் மேலும் 23 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 4000 ரன்களை பூர்த்தி செய்வார்.

இதையும் படிங்க : 112/5 டூ 353 ரன்ஸ்.. ஒருத்தர் இல்லாததால் துளிர்விட்ட ரூட்.. வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா.. கம்பேக் கொடுக்குமா?

அதேபோன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 987 ரன்களை அடித்துள்ள அவர் மேலும் 13 ரன்கள் அடித்தால் இங்கிலாந்து அணிக்கு எதிராக மட்டுமே 1000 டெஸ்ட் ரன்களை பூர்த்தி செய்த சாதனையும் படைப்பார். இப்படி இந்த ஒரே போட்டியில் ரோகித் சர்மாவிடம் மூன்று சாதனைகளுக்கான வாய்ப்பு காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement