112/5 டூ 353 ரன்ஸ்.. ஒருத்தர் இல்லாததால் துளிர்விட்ட ரூட்.. வாய்ப்பை நழுவவிட்ட இந்தியா.. கம்பேக் கொடுக்குமா?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் துவங்கியது. 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா பின்தங்கியுள்ளது. எனவே இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள இப்போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்துக்கு பென் டக்கெட்டை 11 ரன்களில் அவுட்டாக்கிய இந்திய வீரர் ஆகாஷ் தீப் அடுத்ததாக வந்த ஓலி போப்பை டக் அவுட்டாக்கினார். அத்துடன் மறுபுறம் 42 ரன்கள் அடித்து சவாலை கொடுத்த மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லியையும் கிளீன் போல்ட்டாக்கிய அவர் இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தார்.

- Advertisement -

மீண்ட இங்கிலாந்து:
அதனால் 57/3 எனத் தடுமாறிய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் நிதானமாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் வந்த ஜானி பேர்ஸ்டோ 38 ரன்களில் அஸ்வின் மற்றும் பென் ஸ்டோக்ஸ் 3 ரன்களில் ஜடேஜா சூழலில் ஆட்டமிழந்தனர். அதன் காரணமாக 112/5 என மேலும் தடுமாறிய இங்கிலாந்து 300 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது நங்கூரமாக விளையாடிய ஜோ ரூட் தன்னுடைய அனுபவத்தை காண்பித்து அரை சதமடித்து இங்கிலாந்து மீட்டெடுத்தார்.

அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய பென் போக்ஸ் 6வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது டாம் ஹார்ட்லி 13 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோ டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரராக உலக சாதனை படைத்து இங்கிலாந்து முழுமையாக காப்பாற்றினார்.

- Advertisement -

போதாகுறைக்கு அவருடன் இணைந்த ஓலி ராபின்சன் இந்தியாவுக்கு மிகப்பெரிய தொல்லையாக அமைந்து 8வது விக்கெட்டுக்கு 102 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து 58 ரன்கள் குவித்து அவுட்டானார். இறுதியில் ஜோ ரூட் கடைசி வரை அவுட்டாகாமல் 122* ரன்கள் எடுத்தும் இங்கிலாந்தை ஒரு வழியாக 353 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் செய்தது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, 4 ஆகாஷ் தீப் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையும் படிங்க: முதல்நாள் போட்டியில் ஆகாஷ் தீப்புக்கு ரோஹித் சர்மா அளித்த மரியாதை.. ரசிகர்கள் பாராட்டு – விவரம் இதோ

அந்த வகையில் என்ன தான் ஆகாஷ் தீப் 3 விக்கெட்டுகள் முதல் 3 போட்டிகளில் பும்ராவிடம் பெட்டிப்பாம்பாக அடங்கி வந்த ஜோ ரூட் இப்போட்டியில் அவர் இல்லாததை பயன்படுத்தி சதமடித்து இந்தியாவுக்கு சவாலை கொடுத்துள்ளார். மறுபுறம் 112/5 என சரிந்த இங்கிலாந்து 353 ரன்கள் அடிக்கும் அளவுக்கு 2வது பகுதியில் சுமாராக செயல்பட்ட இந்தியா 300 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்யும் வாய்ப்பை நழுவ விட்டு இப்போட்டியில் பின்தங்கியுள்ளது என்றே சொல்லலாம். ஏனெனில் ராஞ்சி பிட்ச் நாட்கள் செல்ல செல்ல பேட்டிங்க்கு சவாலாக மாறும். எனவே இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் செயல்பட்டு 400 ரன்கள் எடுப்பது தற்சமயத்தில் வெற்றிக்கு அவசியமாகிறது.

Advertisement