இதர பேட்ஸ்மேன்கள் 151 ரன்ஸ்.. தனி ஒருவனாக 179 ரன்ஸ்.. சேவாக் ஸ்டைலில் ஆடிய ஜெய்ஸ்வால்.. 60 வருட சாதனை

Yashasvi Jaiswal 4
- Advertisement -

விசாகப்பட்டினத்தில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி விளையாடும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி துவங்கியது. இத்தொடரின் முதல் போட்டியில் 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. எனவே அதற்கு பதிலடி கொடுத்து இத்தொடரை சமன் செய்ய இப்போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் விளையாடி வரும் இந்தியா முதல் நாளில் 336/6 ரன்கள் குவித்துள்ளது.

இருப்பினும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா 14, கில் 34, ஸ்ரேயாஸ் 27, ரஜத் படிடார் 32, அக்சர் படேல் 27, கேஎஸ் பரத் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். ஆனால் எதிர்ப்புறம் இளம் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் சதமடித்து பவுண்டரி 5 சிக்சருடன் 179* ரன்கள் விளாசி இந்தியாவை வலுப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

60 வருட சாதனை:
சொல்லப்போனால் இப்போட்டியில் இதர இந்திய பேட்ஸ்மேன்களில் அனுபவமிக்க ரோகித் சர்மா உட்பட யாருமே 35 ரன்கள் கூட தாண்டவில்லை. மேலும் எஞ்சிய இந்திய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சேர்ந்து வெறும் 151 ரன்கள் மட்டுமே அடித்துள்ளனர். ஆனால் வெறும் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவிக்க ஜெய்ஸ்வால் அதே பிட்ச்சில் அதே இங்கிலாந்துக்கு எதிராக தனி ஒருவனாக 179* ரன்கள் விளாசி இந்தியாவைக்கு காப்பாற்றியுள்ளார் என்றே சொல்லலாம்.

அத்துடன் முதல் போட்டியில் அதிரடியாக விளையாடி 80 (76) ரன்களில் அவுட்டான தவறை இம்முறை செய்யாத அவர் இப்போட்டியில் நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனால் 94 ரன்களில் இருந்த போது கொஞ்சமும் தயங்காத அவர் டாம் ஹார்ட்லிக்கு எதிராக ஜாம்பவான் விரேந்தர் சேவாக் போல அதிரடியான சிக்சரை பறக்க விட்டு தன்னுடைய 2வது டெஸ்ட் சதத்தை அடித்தார்.

- Advertisement -

அந்த வகையில் முதல் நாளில் 179* ரன்கள் குவித்துள்ள ஜெயஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு போட்டியின் முதல் நாளிலேயே அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற 60 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 1964ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் முதல் நாளிலேயே இந்தியாவுக்காக முன்னாள் வீரர் புத்தி குண்டேரன் 170* ரன்கள் அடித்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 113/1 டூ 199க்கு ஆல் அவுட்.. அசத்தும் சுதர்சன்.. இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிராக அபார கம்பேக் கொடுத்த இந்தியா ஏ

அத்துடன் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு போட்டியின் ஒரு நாளில் 2வது அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சாதனையையும் அவர் சமன் செய்துள்ளார். இதற்கு முன் 1979 ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் சுனில் கவாஸ்கரும் 179 ரன்கள் அடித்த நிலையில் கருண் நாயர் (236 ரன்கள், சென்னையில், 2016) முதலிடத்தில் இருக்கிறார். இதைத் தொடர்ந்து 2வது நாளில் அவர் இரட்டை சதமடிப்பாரா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்படுகிறது.

Advertisement