113/1 டூ 199க்கு ஆல் அவுட்.. அசத்தும் சுதர்சன்.. இங்கிலாந்து லயன்ஸ்க்கு எதிராக அபார கம்பேக் கொடுத்த இந்தியா ஏ

IND A vs ENG L 2
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரை முன்னிட்டு இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் இந்தியா ஏ அணிகளும் அடுத்தடுத்த பயிற்சி போட்டிகளில் விளையாடி வருகின்றன. அதில் முதல் பயிற்சி போட்டி டிராவில் முடிந்த நிலையில் 2வது போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணியை தோற்கடித்த இந்தியா ஏ அசத்தல் வெற்றி பெற்றது.

அதை தொடர்ந்து இவ்விரு அணிகள் மோதும் 2வது பயிற்சி போட்டி பிப்ரவரி ஒன்றாம் தேதி அகமதாபாத் நகரில் துவங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. ஆனால் அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்தியா ஏ தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றத்தை சந்தித்தது.

- Advertisement -

அபார கம்பேக்:
இந்தியா ஏ அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 0, சாய் சுதர்சன் 7, ரிங்கு சிங் 0 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக தேவதூத் படிக்கள் அரை சதமடித்து 65, சரன்ஸ் ஜெயின் 64 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு மேத்தியூ போட்ஸ் 6, பிரிடோன் கார்ஸ் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்கள்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு கீட்டன் ஜென்னிங்ஸ் 17 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக ஜோடி சேர்ந்த அலெக்ஸ் லீஸ் 64, ஓலிவர் ப்ரைஸ் 31 ரன்கள் எடுத்ததால் இங்கிலாந்து லயன்ஸ் 113/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் அதன் பின் சுதாரித்த இந்திய பவுலர்கள் அந்த ஜோடியைப் பிரித்து அடுத்ததாக வந்த கேப்டன் ஜோஸ் போகண்ணன் 10, ஜேம்ஸ் ரெவ் 6, டான் மௌஸ்லி 13 ரன்களில் அவுட்டாக்கினர்.

- Advertisement -

அத்துடன் ஓலி ராபின்சன் 0, ஜேம்ஸ் கொல்ஸ் 13, பிரிடோன் கார்ஸ் 13, மேத்தியூ போட்ஸ் 11 என டெயில் எண்டர்களையும் குறைந்த ரன்களில் காலி செய்த இந்திய பவுலர்கள் இங்கிலாந்து லயன்ஸ் அணியை 192 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கினார். இந்தியா ஏ சார்பில் ஆகாஷ் தீப் 4, யாஷ் தயாள் 3, சாம்ஸ் முலானி 2, அர்ஷிதீப் சிங் 1 விக்கெட்கள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து 7 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸில் களமிறங்கிய இந்தியா ஏ இரண்டாவது நாள் முடிவில் 148/3 ரன்கள் எடுத்துள்ளது.

இதையும் படிங்க: முன்னாடி அவருக்கு ஏற்பட்ட நிலைமை தான் இப்போ இவருக்கு வந்துருக்கு – சர்பராஸ் கானின் நிலை குறித்து ரசிகர்கள் வருத்தம்

இந்தியா ஏ அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 22, தேவ்தூத் படிக்கல் 21 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் திலக் வர்மா 46 ரன்கள் எடுத்தார். அவருடன் விளையாடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் அவுட்டாகமல் நங்கூரமாக நின்று அரை சதமடித்து 54* ரன்கள் அடித்து களத்தில் இருக்கிறார். அதனால் 141 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள இந்தியா இப்போட்டியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

Advertisement