முன்னாடி அவருக்கு ஏற்பட்ட நிலைமை தான் இப்போ இவருக்கு வந்துருக்கு – சர்பராஸ் கானின் நிலை குறித்து ரசிகர்கள் வருத்தம்

Sarfaraz-Khan
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது இன்று பிப்ரவரி 2-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி தங்களது முதல் இன்னிங்சில் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்களை குறித்துள்ளது.

இந்திய அணி சார்பாக துவக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 179 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காவில் களத்தில் உள்ளார். இந்நிலையில் இந்த இரண்டாவது போட்டியின் போது கே.எல் ராகுல் மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடாததால் அவர்களுக்கு பதிலாக எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

- Advertisement -

அந்த வகையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கே.எல் ராகுலுக்கு பதிலாக அறிமுக வீரராக ரஜத் படித்தாருக்கும், ரவீந்திர ஜடேஜாவிற்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் காரணமாக இளம்வீரர் சர்பராஸ் கானுக்கு பிளேயிங் லெவனின் இடம் கிடைக்கவில்லை.

தற்போது 26 வயதான சர்பராஸ் கான் கடந்த பல ஆண்டுகளாகவே டொமஸ்டிக் கிரிக்கெட்டில் சதத்திற்கு மேல் சதம் அடித்து மலை போல ரன்களை குவித்து வருகிறார். அதோடு இந்தியா ஏ அணிக்காகவும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். எனவே நிச்சயம் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர்.

- Advertisement -

ஆனால் மீண்டும் சர்ஃபராஸ் கானுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் வருத்தம் அடைந்த ரசிகர்கள் அவரை இந்திய வீரர் சஞ்சு சாம்சனுடன் ஒப்பிட்டு ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதாவது திறமையான வீரராக இருக்கும் சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் அடிச்சும் நாங்க தான் லீடிங்.. இந்தியா செஞ்ச தப்பை இங்கிலாந்து செய்யாது.. எச்சரித்த பீட்டர்சன்

அதே நிலைமைதான் தற்போது சர்ஃபராஸ் கானுக்கும் ஏற்பட்டுள்ளதாக ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதாவது டொமஸ்டிக் கிரிக்கெட்டில் மிகச் சிறப்பான ஆட்டத்தை விளையாடி வரும் சர்பராஸ் கான் அணியில் இருந்தும் 30 வயதான ரஜத் பட்டிதாருக்கு வாய்ப்பு வழங்கியது ஏன்? சர்பராஸ் கான் அணியில் இடம் பிடிக்க இன்னும் என்னதான் செய்ய வேண்டும்? என ரசிகர்கள் தங்களது ஆதங்கங்களை முன்வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement