ஜெய்ஸ்வால் அடிச்சும் நாங்க தான் லீடிங்.. இந்தியா செஞ்ச தப்பை இங்கிலாந்து செய்யாது.. எச்சரித்த பீட்டர்சன்

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. குறிப்பாக முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 190 ரன்கள் முன்னிலை பெற்ற இந்தியாவை 2வது இன்னிங்ஸில் 231 ரன்களை வைத்து தோற்கடித்த அந்த அணி ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ளது.

அந்த வகையில் அதிரடியாக விளையாடி இந்தியாவை வீழ்த்துவோம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து தற்போது அதை செயலிலும் காட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி பிப்ரவரி 2ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து முதல் நாள் முடிவில் 336/6 ரன்கள் குவித்து நல்ல துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

வேற மாதிரியான பேட்டிங்:
இந்திய அணிக்கு ரோகித் சர்மா 14, கில் 34, ஸ்ரேயாஸ் 27, ரஜத் படிடார் 32, அக்சர் படேல் 27, கேஎஸ் பரத் 17 என முக்கிய பேட்ஸ்மேன்கள் மீண்டும் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி குறைந்த ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் இளம் துவக்க வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்துக்கு தனி ஒருவனாக சவாலை கொடுத்து சதமடித்து 179* ரன்கள் குவித்து இந்தியாவுக்கு வலுவான துவக்கத்தை கொடுத்துள்ளார்.

இங்கிலாந்து சார்பில் சோயப் பசீர் மற்றும் ரீகன் அகமது தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இந்நிலையில் இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா போல மெதுவாக விளையாடாமல் இங்கிலாந்து அதிரடியாக அட்டாக் செய்து விரைவாக ரன்களை குவிக்கும் என்று முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மேலும் பிட்ச் ஓரளவு பேட்டிங்க்கு சாதகமாக இருந்தும் மெதுவாக விளையாடிய இந்திய அணியின் அணுகுமுறையால் இப்போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து தான் முன்னிலையில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி ஜியோ சினிமா சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “இப்போட்டியில் இங்கிலாந்து பேட்டிங் செய்வதற்காக வரும் போது அவர்கள் அட்டாக் செய்து வேகமாக நேர்மறையாக ரன்களை குவிப்பார்கள் என்பதை நாம் அறிவோம். குறிப்பாக இன்றைய நாளில் இந்தியா பேட்டிங் செய்த வழியில் அவர்கள் தங்களுடைய இன்னிங்ஸில் பேட்டிங் செய்யப் போவதில்லை. அது இந்த போட்டியில் இங்கிலாந்தை முன்னிலைப்படுத்தியுள்ளதாக நான் கருதுகிறேன்”

இதையும் படிங்க: முகமது அஸாருதீனை கடந்து சுனில் கவாஸ்கரை சமன் செய்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

“ஏனெனில் முதல் நாளில் பிட்ச்சில் பெரிய தாக்கம் எதுவும் இல்லை. பவுன்ஸ் சமமாக இருந்த நிலையில் பந்து அதிகமாக சுழலவில்லை. ஆனால் அந்த சூழ்நிலையில் ஜெய்ஸ்வால் போல வேறு ஏதேனும் ஒரு இந்திய வீரர் ரன்களுக்கான பசியுடன் செயல்பட்டிருந்தால் இந்நேரம் கதை வேறு மாதிரியாக இருந்திருக்கும். அதன் காரணமாக தற்போது ஜெய்ஸ்வாலுக்கு எதிர்ப்புறம் கை கொடுத்திருக்க வேண்டிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக அஸ்வின் இருக்க வேண்டும் என்று இந்தியா நம்ப வேண்டியுள்ளது” என கூறினார்.

Advertisement