ரூபாய் 5 கோடி மதிப்பில் பிரமாண்ட அப்பார்ட்மெண்டை விலைக்கு வாங்கிய யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – எங்கு தெரியுமா?

Jaiswal-Home
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர இளம் அதிரடி துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 19 வயதுக்குட்பட்டோர் உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இதுவரை மூன்று சீசன்களில் விளையாடியுள்ள அவர் 37 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் எட்டு அரைசதங்களுடன் 1172 ரன்கள் குவித்துள்ளார்.

தொடர்ச்சியான அவரது சிறப்பான செயல்பாடு காரணமாக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூலை மாதம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் போட்டியிலேயே 171 ரன்களை குவித்து அசத்தினார். அதனை தொடர்ந்து தற்போது வரை இந்திய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார் மூன்று சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் என 861 ரன்கள் குவித்துள்ளார்.

- Advertisement -

மேலும் டி20 கிரிக்கெட்டில் 17 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களுடன் 502 ரன்கள் குவித்துள்ளார். இப்படி டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 போட்டிகளில் மிகச் சிறப்பாக விளையாடும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் விரைவில் ஒருநாள் அணிக்காகவும் அறிமுகமாவார் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

அதோடு இந்திய அணிக்காக விளையாடி வரும் 22 வயதே ஆன இவர் இனிவரும் காலங்களில் ஏகப்பட்ட சாதனைகளையும் நிகழ்த்த வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தற்போது மும்பையில் 5 கோடி மதிப்பிலான ஒரு பிரம்மாண்டமான அப்பார்ட்மெண்ட்டை விலைக்கு வாங்கியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அந்த வகையில் ஜெய்ஸ்வால் அவர்கள் மும்பை பாந்த்ரா பகுதியில் 5 கோடியே 38 லட்ச ரூபாய்க்கு 1110 சதுர அடி பரப்பளவை கொண்ட அப்பார்ட்மெண்ட்டை பதிவு செய்திருந்ததாக கூறப்பட்ட வேளையில் இந்த கட்டுமான பணி நிறைவடைந்து கடந்த ஜனவரி 7-ஆம் தேதி அன்று அவருக்கு அந்த புதிய வீடு பதிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த குடியிருப்பு பணிகள் இந்த ஆண்டு நிறைவு பெற்று முற்றிலுமாக அவரது கையில் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தனது 11-ஆவது வயதிலேயே சொந்த ஊரிலிருந்து கிரிக்கெட்டுக்காக மும்பை வந்த ஜெய்ஸ்வால் கடுமையான போராட்டத்திற்கு பிறகு தற்போது சொந்த வீட்டை வாங்கியுள்ளது அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement