ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் புதிய உச்சம் தொட்ட யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – விவரம் இதோ

Jaiswal
- Advertisement -

இந்திய அணியின் இளம் அதிரடி துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதுவரை நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளில் அவர் இரண்டு இரட்டை சதங்களை அடித்து அசத்தலான செயல்பாட்டையும் வெளிப்படுத்தி உள்ளார்.

அதோடு நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இரண்டாவது இன்னிங்சின் போது 236 பந்துகளை சந்தித்து 14 பவுண்டரி மற்றும் 12 சிக்ஸர்கள் என 214 ரன்கள் குவித்து அசத்தினார். அவரது இந்து செயல்பாடு காரணமாக இந்திய அணி மிகச் சிறப்பான வெற்றியை பெற்று இருந்தது.

- Advertisement -

அதோடு அவர் இந்த டெஸ்ட் தொடரில் அடுத்தடுத்து இரண்டு இரட்டை சதங்கள், ஒரு தொடரில் அதிகபட்ச சிக்சர்கள் (22), ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் (12) என ஏகப்பட்ட சாதனைகளை நிகழ்த்தியுள்ள அவர் முன்னாள் வீரர்கள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறார்.

அவரது இந்த சிறப்பான ஆட்டத்திற்கு பிறகு தற்போது ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலிலும் அவர் முன்னேற்றத்தை கண்டுள்ளார். அந்த வகையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு வெளியிடப்பட்ட ஐ.சி.சி டெஸ்ட் பேட்டிங் தரவரிசை பட்டியலில் 14 இடங்கள் முன்னேற்றத்தை சந்தித்துள்ளார்.

- Advertisement -

அதன்படி 699 புள்ளிகள் பெற்றுள்ள அவர் தற்போது டெஸ்ட் தரவரிசை பட்டியலில் 15-வது இடத்தை பிடித்துள்ளார். இந்த பட்டியலில் ரோகித் சர்மா 12-ஆவது இடத்திலும். விராட் கோலி 7-ஆவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : முதல் பந்தே சுத்துனாலும்.. பும்ராவுக்கு பதில் அவர் வந்தாலும்.. நாங்க மாறாமட்டோம்.. ஓலி போப் பேட்டி

அதேபோன்று ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களுக்கான பட்டியலில் சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை பும்ரா முதலிடத்திலும், ஆல்ரவுண்டர்கள் தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement